பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 வாழும் கவிஞர்கள் மண்ணுலகில் பிறந்தபயன் காணா வண்ணம் மடிந்துபோகும் நாள்மட்டும் உழைத்து ழைத்துப் பன்னலமும் நலஞ்சான்ற பயனும் இன்றிப் பாட்டாளி சிந்துவதோ இரத்தக் கண்ணிர் குன்றுகின்ற வயதினராய்க் கூன டைந்து குறைபட்ட உளத்தினராய் வாழ்வோர் தாமும் என்றென்றும் நிலைகலங்கி இருக்கும் போதோ எழுத்தாகும் அவர்சிந்தும் உழைப்புக் கண்ணி ! உருவாகும் கண்ணிர்கள் பலவென் றாலும் உண்மையதன் கண்ணிரே வெற்றி கானும் திருநாட்டின் உயிர்காப்போர் கண்ணி யாவும் தெளிவான வரலாற்றுக் கடலாய் ஒடும் அரும்நூல்கள் விடுகின்ற காலக் கண்ணிர் அன்றாடம் படித்தறியும் பாடம் என்றால் ஒருநாளும் அதைக்கொள்ளத் தயக்கம் இல்லை ஒளிமிக்க எதிர்காலம் வாழ்த்தும் அன்றோ ! இவை யாவும் அற்புதப் பாடல்கள், படிப்போர் கண்களைக் குளமாக்கும் பான்மையுடையவை, இன்னும் காலம் இடம் கருதி ஆறு பாடல்களைக் கூறாமல் விட்டோமே என்று என் கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது. நீலிக் கண்ணிர் வடிக்க முடியாதவர்களையும் இப்பாடல்கள் கண்ணிர் வடிக்கச் செய்துவிடும். 2. சான்றோர்கள் சுந்தர மூர்த்தியின் திருத்தொண்டத் தொகை கலங்கரை விளக்கமாய் நின்று பின் வருவோரெல்லோரையும் ஆற்றுப் படுத்தும் பான்மையுடையவை. ஆதலால் கவிஞர் சாந்த மூர்த்தி சில சான்றோர்களைத் தம் கவிதைகளில் நினைவு கூர்கிறார். அவர்களைக் காண்போம். காந்தி அண்ணல்:- இந்த நாட்டுத் தந்தை பற்றி ஐந்து பாடல்கள் அண்ணல் என்ற தலைப்பில் உள்ளன. அவற்றில் ஈண்டு ஒன்று தருவேன். வாய்மைக்கோர் வடிவாகி வாழ்ந்த அண்ணல் வரலாற்றில் அமைதிக்கோர் எடுத்துக் காட்டு நோய்கண்ட திருநாட்டின் அவலம் நீக்க நொடிப்போதும் தளராமல் உழைத்த செம்மல் தாய்ப்பாச அன்பாலே மக்கள் நெஞ்சில் தமிழ்போல என்றுமுள உண்மைச் செல்வர்