பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வைரமுத்து 251 என்னாடு பொன்னாடு பகைவர் கையில் இப்போது பலியாடு இருட்டு வீடு கண்ணோடு நரம்போடு கலந்த நாடு கருவாடு போலிங்கே இளைத்த தோடு பொன்னோடு பொருளோடு புகழி னோடு போக்கிவிட்டு ஏந்தியதே கையில் ஒடு உன்னோடு முன்பாடு முடிந்திடாது உதைத்தாடு துண்டாடு பகையைச் சாடு. இல்லாமை, கல்லாமை,கொடுமை,ஏழ்மை இந்நாட்டில் சூர்கயமை எங்கே வாய்மை கல்லாமை, கருத்தின்மை இவற்றிற் கெல்லாம் காலமெலாம் நாமடிமை இவற்றை மீண்டும் சொல்லாமை வேண்டுமதில் துய்மை வேண்டும் சூழ்கின்ற சமுதாய ஆமை தன்னை வெல்லாமல் விடமாட்டோம் அவற்றி லின்றும் விடுதலையை நாம்பெறுவோம் என்றார் நேரு. எழுதியநாள் தெரியாத "எதிர்காலம்' பற்றிய கவிதைகள் அருமையானவை முக்கால மவற்றுள் என்றும் முக்கிய மான காலம் எக்காலம் என்று கேட்டால் எதிர்காலம் என்று சொல்வோம் அக்காலம் நாடித் தானே அவனியே வாழும்? ஈது முக்காலும் உண்மை, கால்கள் மூன்றுதாம் முக்கா லிக்கு. எதிர்காலம் என்ற பேரை எப்படி இட்டார்? இன்பம் எதிர்கொண்டு அழைப்ப தாலா? இல்லையேல் துன்பம் தன்னை எதிர்த்தாடச் சொல்வ தாலா? இரண்டினுள் எதுவந் தாலும் எதிர்பார்த்து வாழ்ப வர்க்கே எதிர்காலம் அமைவ தாலா? தற்காலப் போக்கைப் பார்த்தால் தரணியில் எதிர்கா லத்தில் கற்கால வாழ்க்கை மீண்டும் கண்டிட வேண்டும் போலும்