பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வைரமுத்து 259 வரந்தருவாய் ஒசையினை நிறைப்ப தற்கு வருகின்ற அளபெடைபோல் எனக்கே உன்றன் கரந்தருவாய் கண்ணாடிப் பெண்ணே பூத்த கனிநிலவே நாமிரட்டைக் கிளவி என்பேன் இரட்டையெனும் கிளவிதனைப் பிரித்தல் இங்கே இசைவான பொருளுண்டோ? இன்னும் வாவா! முற்றெதுகை போலினிக்கும் மோகப் பாட்டே முத்தாரச் சிரிப்பழகே இலக்க ணத்தைக் கற்றவர்கள் சொன்னார்கள் தம்பி நல்ல காரிகையைப் புரட்டிப்பார் என்று நானும் சிற்றறிவால் சிந்தித்தேன் இனிக்கும் என்றன் செழுந்தேனே உணைப்புரட்டிப் பார்த்தேன் பின்னால் பொற்றொடியே பூங்கிளியே இலக்க ணத்தில் புரியாத பகுதியெலாம் புரிந்து கொண்டேன். இவை மாணவப் பருவத்தில் பாடியவை. பாடல்களை ஊன்றி நோக்கும் போது பாப்புனையும் பண்பைப் பெறுவதற்கு உள்ள பயிற்சியை ஆர்வத்தைப்பாடுபட்டுப்பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆசனம் செய்து உடல்திறனை வளர்ப்பது போல் ஒருவித வெறியோடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆசனம் செய்து உடல்திறனை வளர்ப்பது போல் ஒருவித வெறியோடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் எனக் கருதவும் இடம் உண்டு.இளமைத் துடுக்கு அடிதோறும் பளிச்சிடுகின்றது. அறிஞர் அண்ணா திருத்தசாங்கம் பற்றிய யாவும் நேரிசை வெண்பாக்கள், கிளியை நோக்கி பேசுவதாக அமைந்தவை சிறப்பாக உள்ளன. - பெயர்:- மழலை மொழிக்கிளியே மன்னவனின் தூய அழகுப் பெயரை அறிவி-பழச்சாறாய்ச் சொன்னாலும் தேனின் சுவையொழுகும் அப்பப்பா அண்ணா துரையென்றே ஆடு. கொடி:- சுற்றும் பகையைச் சுழன்றாடி ஏற்றிடுவான் - வெற்றிக் கொடிதான் விளம்பு. ஆசிரியர் என்ற தலைப்பில் வருபவை. 4972ல் பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர் கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றவை. இவற்றுள் சில,