பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வாழும் கவிஞர்கள் கூறிடக் கூறிடக் குணம்புதி தாகும் ஆணவம் அழியும் ஆசைகள் ஒழியும் பேணிடும் நற்குணம் பெருகியே வளரும் மாணாப் பிறப்பு மறைந்திடும். என்ற அடிகள் நம் நெஞ்சைக் கவர்பவை. மனத்தில் இனிப்பான் மதியில் இனிப்பான் புனையும் கவிதைப் பொருளில் இனிப்பான் சிவனே உணரச் செழும்பொருள் சொன்ன அவனே முருகென் றறி. சேவற் கொடியேந்திச் செங்கையில் வேலேந்திக் கோவைக் கனியிதழில் கொஞ்சுதமிழ்ப் பாவேந்தி நின்றான்என் நெஞ்சைத்தன் நெஞ்சமதில் ஏந்தியவன் சென்றான்என் செய்திடுவேன் செப்பு. என்ற முருகனைப் பற்றிய வெண்பாக்கள் அற்புதமானவை. தமிழ்போல் இனிக்கும் முருகனவன் தண்ணளி சுரக்கும் தெய்வமவன் இமைகள் கண்ணைக் காத்தல்போல் என்றும் காக்கும் தெய்வமவன் அமைதி யோடே நாமுருகி ஆனந் தக்கண் ணிர்விட்டால் சுமையாய்த் தோன்றும் துன்பத்தால் தோன்றும் கண்ணிர் தோன்றாதே. என்ற அறுசீர் விருத்தமும் பாரென் னிடத்தில் பரம்பொருள் பார்எனும் பார்தனிலே சீருற வந்த திருப்புகழ் அன்புடன் செப்பிடவே வேரறும் ஆணவம் கண்களில் நீரெழும் விம்மிமனம் ஆரத் தழுவத் தருவான் முருகன் அறிகுவையே. என்ற கட்டளைக் கலித்துறையும் நம்மை முருகன்பால் செலுத்த வல்லவை. பாரதியாரின், விநாயகர் நான்மணி மாலை, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நால்வகைப் பாக்களால் அமைந்தது. அவன் தம்பி மேல் அம்மையார் யாத்த நான்மணி மாலையோ வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம். அகவல் என்ற