பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கைலாசம் 71 பாவகையால் தோன்றியது. யார் குற்றம்? என்ற தலைப்பில் அமைந்த பாடலில் இசையினிலே குறையென்றால் எழுப்பி விட்ட இசைவாணன் பிழையன்றோ அங்கு மிங்கும் அசைந்திடுதே செடியென்றால் வலிய காற்றை அடிக்கவிட்டோன் பிழையன்றோ ஈர மண்ணைப் பிசைந்து செய்த பானையிலே பழுது காணில் பிழையதனைக் குயவனன்றி யார்சு மப்பார் பசுமையிலை பக்தியிலை நெஞ்சில் என்றால் பண்ணியவன் குற்றமின்றி யார்குற் றம்சொல்? படைத்தவன் மீதே குற்றம் சுமத்துவது அற்புதமாகஉள்ளது. திருக்கருவூர்த்தலப்பெருமை என்ற தலைப்பில் காணப் பெறும் 77 பாடல்களின் ஓட்டமும் சொல்லமைப்பும் நம் நெஞ்சை நெகிழ்விக்கின்றன. சில காட்டுகள், ஈசன் அடியவருக்கு இன்னல் இழைப்பவரை வீசும் மழுப்படையால் வீழ்த்தும் ஒருவிரதம் பூண்ட எறிபத்தர் பூவடிகள் பட்டுலகில் நீண்ட புகழ்விரித்து நின்ற திருக்கருவூர் இன்பத்தை அந்த இறைவனிடம் கண்டுணர்ந்த அன்பர் சிவகாமி ஆண்டார் வசித்ததலம் தேவன் புகழிசைக்கத் தீந்தமிழின் வாயசைத்த தேவர் பிறந்து திகழ்ந்த தமிழ்க்கருவூர். பேருலகில் வந்து பிறப்பதற்கு முன்னாலே யாரும் குடியிருப்பது அன்னைக் கருவூர்தான்! இந்த இறுதிப்பாடல் தத்துவத்தின் ஒளியுடன் மிளிர்கின்றது. அம்மையார் சக்தி தேவிகளைப் பற்றியும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவை அனைத்தும் கல் நெஞ்சத்தையும் கரைக்கும் ஆற்றலுள்ளவை, நன்மையெலாம் தந்தருளும் நாயகியாய் நின்று நானிலத்தை வாழ்விக்கும் உமையவளே தாயே உன்னுடைய நாமமெனும் பீஜமதை எங்கள் உள்ளமெனும் பூமியிலே ஒழுங்குடனே நட்டோம்