பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வாழும் கவிஞர்கள் அன்புநிறை பக்தியெனும் நீரதனை வார்த்தோம் அதுசெழித்து அற்புதமாய் வளர்ந்தோங்கக் கண்டோம் எந்நாளும் அதன்நிழலில் இருக்கின்ற எம்மை எவரென்ன செய்துவிட இவ்வுலகில் முடியும்? என்ற பாடல் ஈரேழு உலகங்களையும் ஈன்று கன்னியாக இருக்கும் உமையம்மையைப் பாடியது. மயிலைக் கற்பகாம்பாள். பவானிதேவி, திருவேற்காடு கருமாரி அம்மன், கொல்லுர் மூகாம்பிகை, மாங்காட்டுக் காமாட்சி, காளித்தாய், காயத்ரி தேவி, யோகினி தேவிகள், லாகினி தேவி. காசினி தேவி, ராகினி தேவி, டாகினிதேவி, ஹாகினிதேவி.யாகினிதேவி, கோலவிழி அம்மன் ஆகிய தேவிமார் மீது அம்மையாரின் பாடல்கள் உள்ளன. மண்ணுக்குள் தானியத்தின் விதையொன்று முளைத்து மறுபடியும் எண்ணற்ற தானியங்கள் விளைக்கும் மண்ணுக்குள் செல்லாமல் வறுபட்ட விதைகள் வளராமல் சுவைமிக்க உணவாக மாறும் எண்ணத்தில் எழுகின்ற காமங்கள் அந்த ஈஸ்வரியின் அருளாலே நிறைவுற்ற தென்றால் திண்ணமவை மறுபடியும் கிளைவிடுவ தில்லை தேவிபக்தி கொண்டமனம் மாறுவது மில்லை மாங்காட்டுக் காமாட்சி மீது பாடிய அற்புதமான பாடல் இது. ஏனையவைகளும் பல்வேறு தத்துவங்களை விளக்குகின்றன. ஜம்மு நாட்டிலுள்ள வைணவ தேவி பற்றி ஐந்து அருமையான பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று. அம்மாஉன் சந்நிதியின் புனிதம் இந்த அகிலமதை வாழ்விக்கும் உனையு ணர்ந்தால் எம்மாயை சூழ்ந்தாலும் அழிந்தி டாமல் இன்புறலாம் இதயத்துள் மகிழ்ச்சி வெள்ளம் கும்மாளம் இட்டுவரும் வாழ்க்கை முற்றும் குறையேதும் வாராது பக்தி பொங்கச் செம்மாந்து நின்றிடலாம் எனவே உன்றன் திருவடியில் தலைசாய்த்து வணங்கு வேனே.