பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் 7 4 கப்புகின்ற இருளகளை விலக்கி வைக்கும் காரியங்கள் அகலாமல் கால்ப திக்கும். முத்துமணி ரத்தினங்கள் கோத்த தேரில் முடியாத அமுகதனைக் கொலுவி ருத்தி எத்திசையும் புகழ்விளங்கப் பவனி செல்லும் ஏற்பாட்டைச் செய்யுமொரு வேந்தனைப் போல் மெத்தாழில் விளங்குகின்ற கருத்துத் தேரில் மேலான இலக்கியத்தை அமரச் செய்து புத்தொளியை நாற்புறமும் பரவ விட்ட பூந்தமிழர் திருசுப்பு ரெட்டி யார்தான், திருமாலை நெஞ்சத்தில் நிறைத்தி ருப்பார் சிவனாரை எக்கணமும் நினைத்தி ருப்பார் ஒருகாலும் பிறர்போற்றும் மதத்தை வாழ்வை உள்ளத்தில் குறைவாகக் கருத மாட்டார் சருகாக உலகத்தில் வாழ்வோர் மீண்டும் தழைக்கின்ற வழிகாண முயற்சி செய்வார் கருகாமல் காயாமல் அறிவுக் கன்று கற்பகமாய்ச் செழித்தோங்க வகைகள் காண்டார். ஞானசம்பந்தர் வாழ்வையும் அடியேனது நூலின் சிறப்பையும் பல கவிதைகளில் அற்புதமாக விளக்கியுள்ளார். இப்போது அவர்தம் கவிதைகளைப் பேசும் வாய்ப்பைக் கவிஞர்.ரெ.முத்துக் கணேசனார் தமிழ் அறக்கட்டளை வழங்கியது குறித்து மகிழ்கிறேன். சபரிமலை ஐயப்பனைப் பற்றியும் ஐந்து கவிதைகள் படைத்துள்ளார். அவற்றுள் ஒன்று. சரணமெனும் பாட்டிசைத்து மக்கள் வெள்ளம் சபரிமலை செல்லுகின்ற காலத் தன்னில் கரணங்கள் மூன்றிலுமே புனிதம் ஓங்கும் காசியங்கள் அனைத்திலுமே மேன்மை ஓங்கும் தருணமெலாம் இறைநினைவே நெஞ்சில் தங்கும் சந்ததமும் ஒளிமயமாம் பாதை தோன்றும், மரணமிலாப் பெருவாழ்வு மனத்துள் பூக்கும் மானுடத்தில் தெய்வீகம் மகிழ்ந்து வாழும் !