பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கை : 75 அம்மையார் இலண்டனில் இருந்தபோது, கொள்ளை எழில்வயிரக் கோபுரம் ஏறிடுவோம் என்ற தலைப்பில் சுதந்திரத்தின் வெள்ளிவிழாச் சுடரொளியில் வந்துலவ-இந்தச் சவுந்தரத்திற் கொருவாய்ப்பு தந்ததிலே பெருமகிழ்ச்சி ஊறிவரும் மகிழ்ச்சியையும் உளமார்ந்த நன்றியையும் கூறிடுவேன் உங்களுக்குக் கும்பிடுவேன் கையெடுத்து நாடுவிட்டு நாடுவந்து நலம்வளர வேண்டுமென்று பாடுபட்டு வாழ்வில்நீர் பரமளித்து வருகின்றீர் பொருளீட்டப் பிறநாடு புகுந்தாலும் மரபுவழி அருளிட்ட வேண்டுமெனும் ஆர்வமுடன் திகழ்கின்றிச் என்று தொடங்கிப்பல அற்புதமான கவிதைகளைக் கேட்போர் நெஞ்சம் பிணிக்கும் வண்ணம் பாடியுள்ளார். விரிவஞ்சி அவை ஈண்டுக் காட்டப் பெறவில்லை. இவை தேசம் என்ற பிரிவில் உள்ளன. அடுத்து சமூகம் என்ற பிரிவில் பொறுமை என்ற தலைப்பில் காணப் பெறும் ஐந்து கவிதைகளில் ஒன்றைக்காண்போம். சிதையுண்டு போகாது சினங்கொள் ளாது தீர்ந்ததும்நம் கணக்கென்று மனங்கொள் ளாது புதையுண்டு சிறியவிதை பொறுமை யோடு பூமிக்குள் தவம்செய்யும்; புதிய தாகக் கதையுண்டு பண்ணுமது; பூக்கும் காய்க்கும் கனியுதவும் பொறுமையினைக் கடைப்பி டித்தால் எதையுண்டு பண்ணுவதற் கியலா தென்றே எல்லோரை யும்பார்த்துக் கேள்வி கேட்கும்? இதில் ஒரு சிறுவிதை பொறுமையைக் காட்டிச் செய்யும் அற்புதங்கள் அற்புதமாகக் காட்டப் பெறுகின்றன. இப் பொறுமை அம்மையாரின்