பக்கம்:வாழும் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 04 வாழும் தமிழ்

செல்வார் அல்லர் என்று, யான் இகழ்ங் தனனே, ஒல்வாள் அல்லள் என்று, அவர்இகழ்ந் தனரே; ஆயிடை, இருபே ராண்மைசெய்த பூசல், நல்லராக் கதுவி யாங்கென் அல்லல் நெஞ்சம், அலமலக் குறுமே.

- - குறுந்தொகை.

'போகமாட்டார் எ ன் .ெ ற ண் ணி நான் அசட்டையாக இருங்தேன். இவள் உடன்பட மாட்டாள் என்று அவர் சொல்லாமல் அசட்டை செய்தார். இதன் இடையே இரண்டு ஆண்மைகளால் உண்டான சண்டை காரணமாக என் நெஞ்சம் பாம்பின் வாயிற் பட்டாற் போன்ற கலக்கத்தை அடைகின்றது.”

இங்கே காதலி தன் மனத்தில் அப்போது இருந்த நிலையையும் காதலன் மனநிலையையும் இருபேராண்மை என்று குறிக்கிருள். அவளுக்கும் ஆ ண் ைம உண்டென்பதை அது தெளிவிக்கின்றது.

தொல்காப்பியரே பின்னல் ஓரிடத்தில் காதலன் காதலியினுடைய தகுதியைப்பற்றிச் சொல்லும் போது இருவரும் ஆண்மையில் ஒத்திருக்க வேண்டும் என்று சொல்கிருர்,

இந்த இடங்களிலெல்லாம் ஆண்மை என்பது ஆளுங் தன்மையாகிய மனவலியைக் குறித்து நிற்கிறது. அதனையே இக்காலத்தில் வீரம் என்று சொல்லு கிருேம். வீரர்களுக்கு ஆள் என்ற பெயர் வழங்கு வதும் இங்கே கினேவுக்கு வருகிறது.

பெண்மை என்பது பெண்பாலின் தன்மையைக் குறிப்பதாலுைம் இரு பாவிலும் காணப்படும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/113&oldid=646163" இலிருந்து மீள்விக்கப்பட்டது