பக்கம்:வாழும் தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்மையும் பெண்மையும் 105

குணத்தையும் குறிக்க வரும். பெண்மையாவது கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை என்று நச்சி ஞர்க்கினியர் எழுதுகிருர். கண்ணுல் காணும்போது சாந்தமான தோற்றத்தைத் தரும் ஓர் இயல்பைப் பெண்மை என்று குறித்தனர். அந்த அமைதியே மனத்தில் விருப்பத்தை உண்டாக்குவது. திரு என்ற சொல்லுக்கு, கண்டோரால் விரும்பப்படும் தன்மை’ என்று உரை எழுதுவர் பேராசிரியர். பெண்மை என்பதும் அத்தகையதே. பெண் எ ன் ப த ன் அடியாகப் பிறந்த பெட்பு என்ற சொல் விருப்பம் என்னும் பொருளில் வழங்குகிறது. ஆதலால் பெண்மை என்பதும் விரும்பும் தன்மை என்று கொள்வதற்குரியதே. பெண்களுக்குப் பெயராக வழங்கும் மாதர் என்ற சொல்லுக்குக்கூட விரும்பும் தன்மை என்ற பொருள் உண்டு. மாதர் காதல்’ என்று தொல்காப்பியரே குத்திரம் செய்திருக்கிரு.ர். இப்படியே பெண்ணைக் குறித்து கிற்கும் பிணை என்ற .ெ சா ல் லு ம் விருப்பத்தைக் குறிக்குமென்று சொல்கிரு.ர். - -

ஆளுங்தன்மை ஆண்மை. அமைதி பெற்று விருப்பத்தை உண்டாக்கும் தன்மை பெண்மை. ஆண்மையை வீரமென்றும் சொல்லலாம். ஆற்ற லுடையான் ஆண்மையுடையான்; அழகும் அமைதி யும் உடையவள் காதலுக்குரியாள். உலகம் முழுதும் ஆணும் பெண்ணுமாக இருப்பது. பல பொருளே ஆற்றலாலே பெற்றுக் கூட்டிக் கொணர்பவன் ஆண் மகன்; அவற்றைத் தொகுத்து அமைத்து நுகர்ச்சிக்கு உரியதாகச் செய்பவள் பெண்மகள். முயற்சியைச் செய்பவன் ஆடவுன், நுகர்ச்சியைக் தருபவள் பெண் மணி. முயற்சியிலே வீரம் பயன்படுகிறது. நுகர்ச்சி யிலே காதல் பயன்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/114&oldid=646166" இலிருந்து மீள்விக்கப்பட்டது