பக்கம்:வாழும் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வாழும் தமிழ்

முயற்சி புறத்திலே நிகழ்கிறது; நுகர்ச்சி அகத்திலே நிகழ்கிறது. வீரத்தின் விளைவு நாடு முழுவதையும் கிலேக்களமாகக் கொள்கிறது; காதலின் விளேவு வீட்டை இடமாகக் கொள்கிறது.

ஆண்மை என்ற மாத்திரத்தில் தோன்றும் வீரம், ஆளுந்தன்மை, முயற்சி என்பவற்றைப் பற்றிய செய்திகளேத் தமிழர் புறப்பொருள் என்ற பகுதியிலே சொன்னர்கள். பெண்மை என்பதல்ை குறிக்கப் பெறும் காதலையும் நுகர்ச்சியையும்பற்றி அகப் பொருள் என்ற பகுதியிலே சொன்னர்கள்.

பெரும்பாலும் மனவலி பெற்றுத் தாளாண்மை யுடன் தொழில் புரிபவன் ஆடவன். ஆகையால் ஆண்மை அவனுக்கு உரியதாயிற்று: என்ருலும் பெண்மணிகளுக்கு மனவலி இல்லையா? உண்டு. ஆகவே ஆண்மை அவர்களிடத்தும் காணப்படும்.

அப்படியே அமைதி பெற்றுக் கண்டோர் விரும்பும் தன்மை பெரும்பாலும் மகளிரிடத்தே காணப்படும். அந்த அமைதி ஆடவனிடத்திலும்

இருப்பதுண்டு. அதுதான் பெண்மை.

இங்க உண்மைகளே உணர்ந்தே ஆண்மை, பெண்மை என்ற இரண்டும் ஆடவர் பெண்டிர் என்னும் இருபாலாரிடத்தும் இருக்கும் இயல்புகள் என்று தொல்காப்பியர் நினைத்தார்.

அவர் எவ்வளவு நுணுக்கமாக மன இயல்பை ஆராய்ந்திருக்கிருர் என்பது இதல்ை தெரியவரும். பெண்ணிலே ஆணையும், ஆணிலே பெண்ணையும் காமும் இந்தக் காலத்தில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/115&oldid=646168" இலிருந்து மீள்விக்கப்பட்டது