பக்கம்:வாழும் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உயர்ந்த பொருள்கள் மனித சாதியை உயர்திணை என்று பகுத்தனர் தமிழர். இந்தப் பிரிவு தமிழுக்கே உரிய சிறப்பு. அறிவு பற்றி அவர்களேப் பிரித்திருக்கிருர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் உயர்தினேயாகவே சொல்லவேண்டும். ஆனல் சில சமயங்களில் வார்த்தை களில் அஃறிணையாக வழங்குவதும் உண்டு. பொருள் உயர்திணையாக இருக்கும்போது சொல் அஃறிணையாக இருக்கக்கூடாது அல்லவா? லக்கணப்படி மாறு பாடாக இருந்தாலும், வழக்கத்தில் இந்த வித்தியாசம் சில சமயங்களில் இருக்கிறது. அந்த வழக்கத்துக்கு ஏற்ப இலக்கணம் செய்யவேண்டுமே ஒழிய, இலக் கணத்தை உத்தேசித்து அடிப்பட்டு வந்த வழக்கை மாற்ற முடியாது. குல்லாய்க்கு ஏற்றபடி தலையைச் சரிபண்ணுவதுபோல முடியும் அந்தக் காரியம்.

அடிமை என்று நாம் இப்போது ஒரு சொல் வழங்குகிருேம். அதை அடிமைத்தனம் எ ன் ற பொருளில் முன் காலத்தில் வழங்கி வந்தார்கள். சில சமயங்களில் அடிமைப் பட்டவனுக்கும் அந்தச் சொல் உபயோகப்பட்டது. அடிமை வந்தது என்று சொன்னல் அடிமைப்பட்டவன் வங்தான் என்று பொருள் சொல்லவேண்டும். -

இரண்டு பரதேசிகள் பேசிக்கொள்கிருர்கள்.

ஒருவர்: சாமி எப்போது இங்கே வந்தது:

மற்றவர். இந்தச் சரீரம் நேற்றுத்தான் வந்தது; அங்குத்தி எப்போது வந்ததோ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/116&oldid=646170" இலிருந்து மீள்விக்கப்பட்டது