பக்கம்:வாழும் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வாழும் தமிழ்

முன்னவர்: அடிமை வங்து ஒரு மாதம் ஆயிற்று.

மற்றவர். இந்தச் சரீரம் இன்னும் ஒரு மாசம் இருக்கலாமென்று உத்தேசம். -

முன்னவர்: அடிமையும் இன்னும் நாலு வாரம் இருக்கத் தீர்மானித்திருக்கிறது. x

இந்த இருவர் பேச்சிலும் அடிமை என்றும், சரீரம் என்றும், வந்தது என்றும், தீர்மானித்திருக் கிறது என்றும் வரும் வார்த்தைகள் உயிருள்ள மனிதர்களைச் சுட்டுவனவாக இலக்கணம் சொல்ல வில்லே. ஆனலும் பேச்சு வார்த்தையில் உயிருள்ள மனிதர்களாகிய உயர்திணையையே அவை சுட்டு கின்றன. # -

"அடேயப்பா அவன் தலைகீழாக அல்லவா நடக் கிருன்? மட்டு மரியாதை, இதம் அகிதம் தெரி கின்றனவா? ஒன்றும் இல்லை’ என்று ஒர் இளைஞனைப் பற்றி ஒருவர் குறை கூறுகிருர்,

"இளவெட்டு ஐயா, இளவெட்டு. அது அப்படித் தான் இருக்கும்’ என்று பதில் வருகிறது. -

இந்தப் ப தி லில் ஏதோ இளங்காளேயைச் சொல்வது போல அமைந்திருக்கின்றன வார்த்தைகள். ஆனலும் அந்த இளவெட்டு என்ற சொல் மனிதனைத் தான் குறிக்கிறது. .

திமுடு உளறுகிறது. யுேம் கேட்கிருயே' என்ற பேச்சிலே வரும் கிழடு என்பதும் முதலில் ஏதோ பிராணியைக் குறிப்பதுபோலத் தோன்றிலுைம் உயர் திணையைக் குறிக்கும் வார்த்தைதான். -

'எங்கள் வீட்டுக்கு விருந்து வந்திருக்கிறது: அரிசிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்’ என்ற பேச்சிலே விருந்து என்பது விருந்தினர்களைக் குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/117&oldid=646173" இலிருந்து மீள்விக்கப்பட்டது