பக்கம்:வாழும் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்த பொருள்கள் 109

அது ஒரு குருடு; அதைப் போய் வேலே செய்யச் சொன்னயே!” என்பதில் வரும் குருடு என்று உறுப்புக் குறையைக் குறி க் கு ம் வார்த்தையும் அத்தகையதுதான். - -

'அரசு அறிந்த வாழ்வு வாழ்வா?’ என்பதில் அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.

இவ்வாறு வரும் வார்த்தைகள் அஃறிணை உருவத்திலே இருந்தாலும் உயர்திணைப் பொருளையே சுட்டு கின்றன. பேச்சிலே தெளிவு வேண்டும் என்பதை வற்புறுத்தும் தொல்காப்பியர் ஒரு சூத்திரத்தில் இத்தகைய வார்த்தைகளைப் பற்றிச் சொல்கிருர்,

'இவை உயர்திணையைக் குறிப்பன. ஆனலும், அஃறிணையாக வார்த்தைகளில் வழங்கப் பெறும்’ என்று இலக்கணம் வகுக்கிருர். தமிழ் நாட்டிலே வாழ்பவர்களுக்கு இவை குறிப்பினலே பொருளே உணர்த்துவன என்று தெரியும். ஆகையால் இந்தச் சொற்களே 'முன்னத்தின் உணரும் கிளவி என்று சொல்கிருர் தொல்காப்பியர். சொல்பவனுக்கும், கேட்பவனுக்கும் இந்தச் சொல் இன்னுரைக் குறிக்கும் என்று குறிப்பாகத் தெரிந்துவிடும். யாருக்கு விஷயம் தெரியவேண்டுமோ, அ. வ ரு க் கு த் தெளிவாகத் தெரியுமானல் நடுவிலே நாம் புகுந்து, “எனக்கு விளங்கவில்லை; அது தவறு’ என்று சொல்லலாமா? அப்படிக் குறிப்பாகச் சொல்வது கியாயமே என்ற இலக்கணம் நமக்குத் தெரியவேண்டுமென்று தொல் காப்பியர் எண்ணி ஒரு சூத்திரம் இயற்றினர். அங்தச் சூத்திரத்தில் அவர் எடுத்துச் சொல்லும் வார்த்தைகள் வருமாறு: குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அடிமை, வன்மை, விருந்து, குழு, பெண்மை, அரசு, மகவு, குழவி என்ற சொற்கள் அலி முதலிய தன்மை மாறியவற்றைச் சுட்டும் பெயர்கள் உறுப்புப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/118&oldid=646175" இலிருந்து மீள்விக்கப்பட்டது