பக்கம்:வாழும் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 வாழும் தமிழ்

வந்த குருடு, முடம் முதலிய சொற்கள்; ஆர்வத்தால் குழந்தையை யானை, சிங்க மென் று வழங்கும் சொற்கள் சிறப்பாலும் கோபத்தாலும் கூறும் வார்த்தைகள்.

இவற்றைச் சொல்லிவிட்டுக் கடைசியில்,

அன்ன பிறவும் அவற்ருெடு சிவணி முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கு இயலும்

என்று கூறி முடிக்கிரு.ர். அவைகளேப் போன்ற பிற வார்த்தைகளும், அவற்ருேடு பொருந்திக் குறிப்பினால் உணர்வதற்குரிய வார்த்தைகளுமாகிய யாவும் உயர் திணையின்பால் ங் லே .ெ ப ற் ற ன. ஆலுைம், அஃறிணையின் சார்பிலே சொல்லப்பெற்று க்ட்க்கும் என்பது இதன் பொருள். d

குடிமை, ஆண்மை போ ன் ற சொற்கள் குணத்தைக் குறிக்க வந்தவை. அந்தக் குணங் களாலேயே குணம் உடையவர்களைக் குறிக்கும் வழக்கம் உண்டென்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். வேறு வார்த்தைகளில் சிறப்பு, இழிவு என்ற இரண்டு வகையிலும் மனிதர்களே அஃறிணைச் சொல்லால் வழங்கும் வழக்கம் உண்டு என்பதை உணர்கிருேம். இக்காலத்தும் இது வழக்கத்தில் இருக்கிறது. மனிதன் தனியாக இருந் தால் அவன், இவன் என்று சொல்லுகிருேம். பல மனிதர்கள் கூடிய கூட்டத்தை அது, இது என்று சொல்கிருேம். ஒரு மனித னுக்கே உயர்வு இருக்கும்போது பல மனிதர்களுக்குப் பின்னும் சிறப்பு இருப்பதுதானே கியாயம்? அப்படியிருக்க, பல மனிதர் குழுவை அஃறிணை வாய்பாட்டாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/119&oldid=646177" இலிருந்து மீள்விக்கப்பட்டது