பக்கம்:வாழும் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்த பொருள்கள் - } | {

சொல்வது தவறு அல்லவா? இலக்கணப்படி தவறு என்பது இருக்கட்டும்; பிராணிகளைச் சொல்வதுபோல அது, இது என்று சொல்லலாமா? இப்படியெல்லாம் சங்தேகம் வந்தால் மாற்றுவதற்குத்தான் தொல் காப்பியர் சூ த் தி ர ம் செய்தார். 'அஃறிணை வார்த்தையால் சொன்னது மரியாதைக் குறைவன்று: அதுவும் ஒரு மரபு” என்று சொல்கிருர், தொல் காப்பியர்.

'அன்ன பிறவும் என்று தொல்காப்பியர் ஒரு. பொடி ைவ த் தி ரு க் கி ரு.ர். இந்த வரிசையில் சேர்வதற்கு ஏற்ற மற்ற வார்த்தைகளும் என்று அதற்கு அர்த்தம் செய்யவேண்டும். காலத்தின் போக்கிலே எத்தனையோ புதிய புதிய வார்த்தைகள் வரும். புதிய புதிய மரியாதை மரபுகள் ஏற்படும். அவற்றுக்கெல்லாம் சேர்த்து இலக்கணம் சொல்ல. வேண்டும்’ என்ற கினைவோடுதான் இந்தப் பொடி வைத்திருக்கிருர், இலக்கண நூல்களில் இப்படிச் சொல்வது வழக்கம். வளர்ந்துவரும் மொழிக்கு, இலக்கணம் இப்படித்தான் அமைய வேண்டும். பின்னலே ஏற்படும் புதிய வழக்கங்களுக்கும் இடம் கொடுத்திருக்க வேண்டும். - “கிழடு தூங்குகிறது” என்ற வாக்கியத்தை இந்தச் சூத்திரத்துக்கு உதாரணம் காட்டவந்தால், 'குத்திரத்தில் மூப்பு என்றுதானே இருக்கிறது?” என்று யாராவது கேட்கலாம். "அன்ன பிறவும்” என்று .ெ த ல் காப் பி ய ர் சொல்வியிருப்பது அதற்காகத்தான். மூப்பு என்ற வார்த்தையை அவர் எடுத்துச் சொன்னலும் அதே பொருளில் வருகிற வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மற்ருெரு வகையான வார்த்தைகளைப்பற்றி வேருெரு சூத்திரம் வருகிறது தெய்வத்தைப்போல் மதிப்பதற்குரிய சில பொருள்கள் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/120&oldid=646179" இலிருந்து மீள்விக்கப்பட்டது