பக்கம்:வாழும் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 வாழும் தமிழ்

அவற்றை உயர்வுடைய பொருள்களாகவே தமிழர் கருதினர். அவற்றைப் பேச்சிலே வழங்கும்போது அஃறிணையாவே சொல்கிருேம். சொல் அஃறிணை யிலே இருப்பதைக் கொண்டு, பொருளுக்குத் தக்க மதிப்பு இல்லே என்று எண்ணக்கூடாது. உயர்ந்த பொருளாலுைம். அ ஃ றி ண வாய்பாட்டால் சொல்வது தமிழர் வழக்கம்.

இந்த வகையில் காலம், உலகம், உயிர், உடம்பு, விதியை வகுக்கின்ற தெய்வம், விதி. ஐம்பூதம், சூரியன், சந்திரன், சொல் என்னும் பத்தும் அவற் றைப் போன்ற பிறவும் அஃறிணை வார்த்தைகளால் சொல்லப் படுமானுலும், உயர்ந்த திணையைச் சார்ந்தனவே. காலத்தின் பெருமையைத் தமிழர் முன்பே உணர்ந்திருந்தனர். அது தெய்வத்தன்மை உடையது என்று கொண்டனர். உலகம் என்று சொன்னது மக்கள் கூடிய தொகுதியை. பல மக்கள் கூடிய தொகுதி சிறப்புடையது என்பது அவர்கள் கொள்கை. மனித உடம்புகூட உயிரோடு இருக்கும் போது உயர்வுடையது. -

தெய்வத்தை, 'பால்வரை தெய்வம்’ என்று தொல்காப்பியர் சொல்கிருர். இன்ன உயிர் இன்னவாறு இன்ப துன்பங்களே அடையவேண்டும் என்று ஊழ்வினக்கு ஏற்பப் பகுத்து வரையறுக்கும் தெய்வம் என்று இதற்குப் பொருள் செய்யவேண்டும், கடவுளுக்கு வேறு பல தொழில் இருந்தாலும், அவரவர்கள் தகுதி அறிந்து அநுபவத்தைச் சார்த்தும் தொழிலேயே சிறப்பாகத் தமிழர் கருதி இருக்க வேண்டும். வேலை செய்தவனுக்குத் தக்கபடி கூலி தரும் செல்வனைப்போல இறைவன் இருக்கிருன். அவன் பட்சபாதம் இன்றி அவரவர் வினையின் அளவுக்கு ஏற்பப் படி அளக்கிருன், இந்தக் கொள்கை தொல்காப்பியர் காளிலே தமிழர் நிெஞ்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/121&oldid=646182" இலிருந்து மீள்விக்கப்பட்டது