பக்கம்:வாழும் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்த பொருள்கள் 1 ! 3

ஊன்றியிருக்கது. மனிதன் அடையும் கன்மை தீமை களுக்குக் காரணம் ஊழ் என்பதும், அந்த ஊழின் படி உயிர்களே இயக்கும் ஆணயுடையவன் இறைவ னென்றும் தமிழர் கொண்டனர். தொல்காப்பியர் பின்னே, காதலனும் காதலியும் ஒன்று படுவது கல்ல ஊழின் வசத்தால் என்றும் சொல்வியிருக்கிரு.ர்.

பால்வரை தெய்வம் வினைக்கணக்கைப் பார்த்து அதற்கேற்ப விளைவு அளிக்கிறது. ஆகவே, அந்த வினையாகிய விதியும் வலிமையுடையதே. அதையும் இந்த வரிசையிலே சேர்க்கிருர் தொல்காப்பியர். ஐம்பெரும் பூதங்களால் உலகு அமைகிறது என்ற உண்மையைத் தமிழர் உணர்ந்தவர். பூதக் கிளவி என்று எழுத்ததிகாரத்திலே பூதங்களேச் சுட்டிச் சொல்கிருர் தொல்காப்பியர். பின்னுல் பொருளதி காரத்திலும் பூதங்களேப்பற்றிச் சொல்லுகிரு.ர். அவற்றின் வலிமை பெரிது. ஆகவே, தெய்வம், வினே என்பவற்ருேடு பூதத்தையும் சேர்த்தார்.

ஞாயிறும் திங்களும் ஆகிய சுடர்களும் மதிப்புக் குரியன; அவற்றையும் சொன்னர். கடைசியில் சொல் என்று சொல்வியிருக்கிருர், மனித சாதிக்கு மேன்மை தருவது சொல். அதனைத் தெய்வமாக மதித்துப் போற்றுவது நம்மவர் வழக்கம். சொல்லென்பது காமகளாகிய தெய்வம் என்று சேனவரையர் இங்கே உரை எழுதியிருக்கிருர், சொல்லின் வகைகளே உணர்ந்து இலக்கணம் வகுத்த தொல்காப்பியருக்கு அதன் பெருமை மிகுதியாகத் தெரியும். ஆகவே, காலம் முதலியவற்றைச் சொன்னவர் கடைசியிலே சொல்லேச் சொல்லி அதற்குத் தனிச் சிறப்புக் கொடுத்தார்.

மனிதர் வாழ்வுக்குப் பயன்பட்டாலும் அவர் களுடைய ஆற்றலுக்குப் புறம்பே பெருமை படைத்து

வா, த - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/122&oldid=646184" இலிருந்து மீள்விக்கப்பட்டது