பக்கம்:வாழும் தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2○ . அகராதிக்கும் அப்பால்

அயல் காட்டிலிருந்து வந்த ஒருவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அவருக்குச் சில தமிழ் வார்த்தைகள் தெரியும். கையிலே ஒரு தமிழ் அகராதி வைத்துக்கொண் டிருப்பார் தெரியாத வார்த்தைக்கு உடனே அதைப் புரட்டிப் பார்த்து

அர்த்தம் தெரிந்துகொள்வார்.

ஒரு கண்பருடைய வீட்டுக்கு அவர் வந்தார். கண்பர் தமிழர். இருவ்ருக்கும் தெரிந்த மொழி ஆங்கிலம். "உங்களுக்குத் தமிழ்கூடத் தெரியுமாமே!” என்று தமிழர் அயல் நாட்டாரைக் கேட்டார். “ஏதோ பேசத் தெரியும் பேசுவதை ஒருவாறு தெரிந்துகொள்வேன்’ என்று சொன்னுர்.

அந்த இருவரும் பேசிக்கொண் டிருக்கையில் தமிழருடைய வேலைக்காரன் அங்கே வங்தான். “வேலைக்காரர்கள் வேலையை முடித்துவிட்டார்கள். என்ன கூலி கொடுக்கட்டும்? என்று கேட்டான். “தலைக்கு எட்டணுக் கொடுத்துப் போகச் சொல், அப்பா” என்ருர் தமிழ்க் கனவான்.

வெளிகாட்டு நண்பர் அங்தப் பேச்சைக் கவனித்தார். வேலே, கூலி, தலே, எட்டணு என்ற வார்த்தைகளுக்கு அவர் அ ர் த் த ம் தெரிந்து கொண்டவர். "வேலேக்குக் கூலி எட்டணுக் கொடுக்கச் சொன்னர். ஆனல் இங்கே தலைக்கு என்ன வேலை?” என்று அவர் யோசித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/145&oldid=646234" இலிருந்து மீள்விக்கப்பட்டது