பக்கம்:வாழும் தமிழ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகராதிக்கும் அப்பால் 13T

"அவர்கள் என்ன வேலை செய்தார்கள்?’ என்று தமிழ்க் கனவானேக் கேட்டார்.

"புழைக்கடையில் ஒரு கிணறு வெட்டினர்கள்' என்று பதில் வங்தது. அவ்விருவரும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டார்கள்.

மறுபடியும் வெளிகாட்டாருக்குச் சந்தேகம் வந்து

விட்டது. "தலைக்கு எட்டணு என்ருரே. தலைக்கு எதற்கு எட்டணு?-ஒன்றும் விளங்கவே இல்லே. அவரையே கேட்டார், "வேலேக்கும் தலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று. தமிழரோ அவர் கேள்வியையே புரிந்து கொள்ளவில்லை. எந்தத் தலை?” என்று கேட்டார். o - 'நீங்கள் உங்கள் வேலைக்காரரிடம் பேசும்போது சொன்னிர்களே, அந்தத் தக்ல.”

சிறிது யோசித்த பிறகுதான் அந்த கண்பர் எதைச் சுட்டுகிருர் என்று தெரியவந்தது. இடிஇடி யென்று சிரித்தார். தலைக்கும் வேலைக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை. தலே என்ருல் இங்கே ஆள் என்று அர்த்தம். ஆளுக்கு எட்டணுக் கூலி கொடு என்று சொன்னேன். தலைக்கு எட்டணு என்றது அதைத் தான்’ என்று அவருக்கு விஷயத்தை விளக்கினர்.

வெளிகாட்டுக் கனவான் அதோடு விடவில்லை. தம்மிடமிருந்த தமிழகராதியை எடுத்தார்; பார்த்தார். தலை என்பதற்கு ஆள் என்ற அர்த்தம் அதில் காண வில்லை. நீங்கள் சொன்ன பொருள் இதில் இல்லையே?’ என்று கேட்டார். :

தமிழ் நண்பர் என்ன சொல்வார்? 'அகராதியில் இல்லேயென்பது உண்மைதான். ஆனல் து அகராதிக்குப் புறம்பான வழக்கம் வாழ்க்கையோடு ஒட்டி உணர வேண்டியது” என்று சொல்லியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/146&oldid=646236" இலிருந்து மீள்விக்கப்பட்டது