உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வாழும் வழி


நாளடைவில் பழைய ஆர்வத்திற்கிடனின்றி எளிமையாய் விடுகிறது.

ஒரு புது வீடு கட்டினும், ஓராண்டு வரையும் வருவார் போவார்க்கெல்லாம் அதன் ஒவ்வொரு பகுதியையும் காட்டிக் காட்டி விளக்கி விளக்கிப் பெருமை கொண்ட பின்னர், சுவர், கதவு, தூண் முதலியவற்றின் வண்ணநிறம் மங்கமங்க, உடையவரது உள்ளத்தெழுச்சியும் மங்குகிறது.

ஆனால், மக்கள் பெயரளவில் வடிவ அமைப்பில் மட்டும் மக்களாய் இன்றி, உண்மையில் மக்கட் பண்புடையராய் - நல்லவராய் நடந்து கொண்டால் அவர் தம் வாழ்நாள் முற்றிலும் அவர்க்கு இன்பமே பேரின்பமே!

அஃதாவது, ஒருவன் புத்தழகும் புதுப் பொலிவும் உடையவனாய், புத்தெழுச்சி கொண்டவனாய், புது வண்டி பெற்றவனாய், புதுமனை புகுந்தவனாய்க் காணப்படினும், அவனிடம் நீதியோ நேர்மையோ ஒழுக்கமோ பண்பாடோ மானமோ மதிப்போ இல்லையெனின் அவன் நிலை யாது? அவன் வாழ்வு எத்தகையது? அவனை முன்னே விட்டுப் பின்னே எள்ளி நகையாடுமன்றோ உலகம்! ‘இதோ போகிறான் பாருங்கள் இவன் செய்த செயல் தெரியுமா?” என்று ஏசுமே மக்கள் கூட்டம்!

இதனாலேயே, ‘வாணாள் முழுவதும் இன்ப வாழ்வு வேண்டுமானால் நல்லவனாய் நட’ என்று கூறிற்றுப் போலும் அந்தப் பழமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/10&oldid=1103451" இலிருந்து மீள்விக்கப்பட்டது