பக்கம்:வாழும் வழி.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வாழும் வழி


புன்செய் என்பவற்றை நஞ்சை புஞ்சை என ஒலிப்பதாலும் புலப்ப்டுமன்றோ? அதுபோலவே, குடி செய் குடிசையாய் விட்டது போலும். குடி என்னும் சொல்லோடு செய், இல் இன்னும் இரு சொற்களையும் இணைத்து, குடியிருக்கும் நிலமாகிய இடம் என்னும் பொருளில் குடி செய் இல் - குடிசெய்யில் (குடி + செய் + இல்) என்று பெயர் வழங்கினார்கள். இது நாளடைவில் குடிசெய்யில் - குடிசயில் - குடிசயில் - குடிசல் - குடிசல் - என்று குறந்து மருவிவிட்டது. மருவி வரும் இத்தகைய சொற்களை தமிழிலக்கணத்தில் மரூஉ என்பார்கள். கொச்சைச் சொற்களாகிய இச் சொற்களும் நாளடைவில் இலக்கணமுடைய சொற்களைப் போலவே காணப்பட்டு இலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டன. எனவே, குடிசை என்றால், குடியிருக்கும் வீடு என்பது பொருள் என்பது இப்போது எல்லோர்க்கும் விளங்கலாம். ஆகவே, இவ்வீட்டுப் பெரியார் ‘தம் குடிசையில் வந்து தங்க வேண்டும்’ என்று கூறியதை, தாம் குடியிருக்கும் வீட்டில் வந்து தங்கவேண்டும் என்று கூறியதாகவே யான் எண்ணி இங்கு வந்தேன். ஆனால் அவர் யான் ஓலைக் கூரை வீட்டை எண்ணி ஏமாந்துவிட்டதாகத்தாம் எண்ணி ஏமாந்துவிட்டார்” என்று, அத்திருமணச் சொற் பொழிவில் கூறினேன்.

ஆனால், அவரை ஏமாற்றியதுபோல் யான் எல்லோரையும் ஏமாற்ற விரும்பவில்லை; ஏமாற்றவும் முடியாது. மனிதன் முதலில் கட்டிய வீட்டிற்கு குடிசை - குடில் - குடிசல் என்ற பெயர்களை வைத்தான். பின்னர் அறிவு முதிர முதிர, நாகரிகம் வளர வளரப் புதுப் புது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/102&oldid=1109707" இருந்து மீள்விக்கப்பட்டது