உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

101


முறையில் வீடு கட்டத் தொடங்கினான். அப்புது வீடுகட்கெல்லாம் புதுப் புதுப்பெயர்கள் வைத்தான். ஏன்? ஆரம்ப கால வீடுகளினின்றும் இவற்றிற்கு வேற்றுமை காட்ட வேண்டுமல்லவா? முதலில் நான்கு கால்களுடன் செய்த பொருளுக்கு ‘நாற்காலி’ என்று பெயர் வைத்தான். பின்னர் நான்கு கால்களுடன் அமைக்கப்பட்ட (மேஜை, ஸ்டூல் முதலிய) பல பொருள்களைக் கண்டு, அவற்றையெல்லாம் நாற்காலி என்றழைக்கவில்லை. முதலில் கண்ட நாற்கால் பொருளை மட்டுமே நாற்காலி என்ற சொல்லால் குறிப்பிட்டு வருகிறான். இதற்குத்தான் இலக்கணத்தில் ‘காரண இடுகுறிப் பெயர்’ என்று பெயராம். அதுபோலவே, மாட மாளிகைகளும் குடியிருக்கும் இருப்பிடமாயினும் அவற்றைக் குறிக்காமல் முதலில் கண்ட ஓலைக் கூரைகளை மட்டுமே குடிசை - குடில் - குடிசல் என்னும் பெயர்களால் மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஃது இயற்கைதானே!


14. தமிழ்ச் சொல் மலர்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்”

என்ற சுப்பிரமணிய பாரதியாரின் பொருள் பொதிந்த மொழிக்கிணங்க மொழிப்பற்று சிறந்து வருகின்ற நிலையிலுள்ளது நம் தமிழ்நாடு. பண்டைக் காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/103&oldid=1119182" இலிருந்து மீள்விக்கப்பட்டது