112
வாழும் வழி
இப்போது விஞ்ஞான வெறி பிடித்து அணுகுண்டு போடுவதிலிருந்து அயல் கோளங்கட்கு (செவ்வாய்சந்திர மண்டலங்கள்) தாவுவது வரை வந்துவிட்டான்.
இவர்களுள், ஆதியில் ஆடையின்றி வாழ்ந்தவன் மூடன் - இப்போது அயல் கோளத்திற்கு தாவுபவன்தான் அறிவாளி என்பது பொருளா? இல்லை. இயற்கை யென்னும் துலைத் தட்டில் எடைபோட்டுப் பார்க்குங்கால் இருவருஞ் சரிநிகர் சமனே அவன்தானே இவன் இவன்தானே அவன் எட்டு வயது சிறுவன்தானே எண்பது வயது கிழவனாவான். முப்பது வயது மனிதன் செய்யுஞ் செயல்களைச் செய்யத் தெரியாமையால் மூன்று வயது குழந்தையை நாம் இகழ்வதுண்டோ - இகழ்ந்தால் அது அறிவீனமல்லவா? இதே முப்பது வயது மனிதன் இப்போது செய்யுஞ் செயலை மூன்று வயதில் செய்தானா? செய்ய இயற்கை இடந்தராதே. 19-ஆம் நூற்றாண்டில் கம்பியில்லாத் தந்தையை (Wireless) கண்டுபிடித்த மார்க்கோனி (Marcony) ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் இருந்தால் அதனைக் கண்டுபிடித்திருக்க முடியுமா. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பேசும் படக் காட்சி, ஒலிபெருக்கி, மின் விளக்கு, மின் வண்டி முதலியவற்றைக் கண்டுபிடித்த தாமசு ஆல்வா எடிசன் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் அவற்றைக் கண்டுபிடித்திருக்க முடியுமா? முடியாதன்றோ? மற்றைய விஞ்ஞானிகளும் இத்தகையோரே!
மற்றும், இன்னின்ன பொருளைக் கண்டுபிடித்த பெருமை இன்னின்ன விஞ்ஞானிகட்கு மட்டுந்தான் உரியது என்று சொல்வதும் பொருந்தாத தொன்றேயாம். மாணவன் பத்தாவது வகுப்புத் தேர்வில் வெற்றி