பக்கம்:வாழும் வழி.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

117


காசு மதிப்புள்ள ஒரு புடவை வாங்கச் செய்கின்றது. அன்று விலங்கு போல் ஊமையாயிருந்த மனிதனை, இன்று பல்கலைப் புலவனாக்கி வருகின்றது. அன்று சிறு மலைப்பிளவைக் கடக்கவும் அஞ்சிய மனிதனை, இன்று மதி (சந்திரன்) மண்டலத்திற்குச் செல்ல முன்கூட்டிப் பதிவு (Register) செய்ய வைக்கின்றது. விஞ்ஞான வித்தின் விளைவுதான் என்னே!

அன்றைய விஞ்ஞானம் பால் என்றால், இன்றைய விஞ்ஞானம் அதிலிருந்து எடுக்கப்பட்ட நறு நெய்யாகும். அன்றைய விஞ்ஞானம் விறகு என்றால், இன்றைய விஞ்ஞானம் வெந்தழலாகும். அன்றைய விஞ்ஞானம் ஒரு கோழி முட்டையென்றால், இன்றைய விஞ்ஞானம் அம்முட்டையினின்றும் கால், வால், தலை முதலியவற்றோடு வெளிவந்த கோழிக்குஞ்சாகும். இக்குஞ்சு இன்னும் பெரிய கோழியாகும். அன்றைய விஞ்ஞானம் ஒரு சிறிய ஆலம் வித்து என்றால், இன்றைய விஞ்ஞானம் அவ்வித்திலிருந்து தோன்றிய ஆலஞ்செடியாகும். இன்னும் இச்செடி, ஒரு மன்னர் மன்னன் தன் பெரும் படைகளுடன் தங்குதற்குரிய அளவு நிழல்தரும் பெருமரமாக விழுதுவிட்டு விரிந்து படர்ந்து வளர்ச்சி பெறும். விஞ்ஞான வித்தின் விரிவுதான் என்னே!

16. ‘அத்தி பூத்தாற் போல...!’

'அத்தி பூத்தாற்போல இருக்கிறதே உங்கள் வருகை!’ என்று ஒருவர் மற்றொருவரை நோக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/119&oldid=1119184" இருந்து மீள்விக்கப்பட்டது