பக்கம்:வாழும் வழி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வாழும் வழி


போன்ற தோலுடன் இருக்கும் கொட்டை அண்ட கோசமாகும். சில பெண்கள் பிள்ளை பெறாததைப் போல, பலாப்பழத்துக்குள்ளேயும் சில மலர்களே சுளைகளாக மாற, சில மலர்கள் வெறும் நார்களாகவே தங்கிவிடுகின்றன. பலாப்பழம் உண்ணும் மக்கள் இந்த நார்களை அறிவார்களே.

இப்படியாகப் பல பூக்கள் தம் பல பாகங்களுடன் ஒரு சமூகம்போல் - குழுவாக ஒன்று சேர்ந்து ஒரு கனி போல் மாறுவதால் அன்னாசிப்பழம், பலாப்பழம் போன்றவற்றை ‘பரிணாம சமூகக் கனி’ என்றழைப்பர். நாம் இதனை ‘மாறிய கலப்புக் குழுக் கனி’ எனச் சொல்லலாம்.

இனி மூன்றாவது படியாக நாம் நம் இலக்கை அடைய வேண்டும். அதாவது அத்திக்கனிக்கு வர வேண்டும். இந்த இலக்கை அடைவதற்காகத்தான் இவ்வளவு வழி கடந்து வரவேண்டியிருந்துது. பல படிகளைக் கடந்தால்தானே உச்சியை அடைய முடியும்?

விருந்த பரிணாம சமூகக் கனிகள்

அத்தி, ஆல் ஆகியவற்றின் கனிகளும் கலப்புக் குழுக் கணிகளே. ஆனால் இவற்றின் மலர்கள், அன்னாசி, பலா ஆகியவற்றையும்விட மிகச் சிறியனவாகவும் மிக்க மாறுதல் உடையனவாகவும் உள்ளன. பூக்களைத் தாங்கும் விருந்தங்கள் இவற்றில் மாறிவிடுகின்றன. விருந்தமானது ஒரு கிண்ணம் போலாகி மலர்களை உள்ளே அடக்கிக்கொண்டிருக்கிறது. இக் கனிகளை அறுத்து உட்பகுதிகளை நன்றாகப் பார்க்கின், விதை போல் காணப்படுவனவெல்லாம் பூக்களே என்பது நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/130&oldid=1111830" இலிருந்து மீள்விக்கப்பட்டது