உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வாழும் வழி


காரர்களுக்கு, வள்ளல் நள்ளியின் வரலாறு ஓர் அறை கூவலன்றோ? இத்தகைய புகழ் வேட்டைக்காரர்களை நோக்கி, உங்கள் ஊர் பேர் என்ன என்று கேட்டால், இவர்கள் விரிவாகத் தங்கள் வாழ்க்கை வரலாற்றையே எழுதிக் கொடுத்தாலும் கொடுப்பார்கள் கேட்காத போதே தம் புகழ் பாடுபவர்களாயிற்றே!

ஏதேனும் நன்கொடை கொடுத்துவிட்டு, தங்கள் பெயரை வெளியிடவே கூடாது என்று வற்புறுத்திக் கேட்டுக்கொள்பவர்களும் இக்காலத்தில் சிலர் உளர். ஆனால் இவர்களுள் பெரும்பாலோர், புகழ்ச்சியில் உள்ள வெறுப்பினால் இவ்வாறு நடந்து கொள்வதில்லை; பலமுறை கெஞ்சிக் கேட்ட பிறகு வேண்டா வெறுப்புடன்தாங்கள் கொடுத்த சிறிய நன்கொடையின் இல்லையில்லை - வன்கொடையின் அளவு பிறருக்குத் தெரியக் கூடாது என்பதற்காகவும், இதையறிந்து இன்னும் பலர் வந்து கேட்காமல் இருப்பதற்காகவுமே இத்தகையோர் தங்கள் பெயரை வெளிக்காட்டுவதில்லை. இவர்களை நோக்க, புகழ்ச்சியை விரும்பியாவது உலகிற்கு உதவி ஒப்புரவு செய்பவர்கள் வரவேற்கத் தக்கவர்களல்லவா?

புகழ்ச்சியை விரும்பாது நல்லதற்கு நல்லவர்க்குக் கைம்மாறு கருதாது உதவிய நள்ளி போன்றோரால் அல்லவா வன்பரணர் போன்றோர் வாழ முடிந்தது? வன்பரணர் போன்ற புலவர் பெருமக்கள் வாழ்ந்ததனால் அல்லவா தமிழ்மொழி வளம்பெற்றுள்ளது? புகழ் வேண்டாத நள்ளியின் புகழ் வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/42&oldid=1104819" இலிருந்து மீள்விக்கப்பட்டது