பக்கம்:வாழும் வழி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வாழும் வழி


ஆராய்ச்சித் திறன் பெற்ற உலகம் - விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

ஒருவேளை, எருவிடாமல் விளைந்தாலும் விளையலாம் - நீர்பாய்ச்சாமல் விளைந்தாலும் விளைய லாம் - களை பறிக்காமல் விளைந்தாலும் விளையலாம். காவல் காக்காமல் விளைந்தாலும் விளையலாம்; ஆனால் விதையில்லாமல் நிலம் விளைய முடியுமா? இங்ங்னம் கூறுபவர்களை உலகப் பொருட்காட்சி நிலையத்தில்தான் வைக்கவேண்டும்.

இவர்கள் இந்த பெரிய இமாலயப் பிழையை தங்கள் மேல் சுமத்திக் கொள்ளவில்லை; திருவள்ளுவர் தலைமேல் கட்டிவிட்டிருக்கிறார்கள். இதுதான் வியப்பு! இல்லையில்லை, வியப்பில்லை வருந்தத்தக்கது. அஃது என்ன? இவர்கள், திருவள்ளுவரின் ஒரு குறளுக்கு, உண்மைப் பொருள் உணராது, இவ்வாறு திரிபான பொருள் கூறியுள்ளார்கள். அந்தக் குறள் வருமாறு:

“வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”

என்பது குறள். இது விருந்தோம்பல் என்னும் பகுதியில் உள்ளது. இப் பாடலுக்கு, பழைய உரையாசிரியர்கள் பலரும், அவர்களைப் பின்பற்றிய இக்காலத்தவர் பலரும், மேற்கூறிய கருத்தையே உரையாக எழுதியுள்ளனர். இக் குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்ற அறிஞர்களுங்கூட, அந்தக் குட்டையில் ஊறின மட்டையாகவே காணப்படுகின்றனர். அதாவது “விருந்தினர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/60&oldid=1106291" இருந்து மீள்விக்கப்பட்டது