பக்கம்:வாழும் வழி.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வாழும் வழி


பெயர் ‘திருத்தொண்டர் புராணம்’ என்பதும் அறியப்பட்டாவது இருந்தன; ஆனால், திருவாசகத்திற்கு மாணிக்கவாசகர் இட்ட பெயர் சிவபுராணம் என்பது இதுநாள் வரை எவரானும் அறியப்படாதிருந்ததுதான் அந்த இரங்கத்தக்க நிகழ்ச்சியாகும்.

எனது ஆராய்ச்சி குறித்துக் கருத்து வேறுபாடு கொள்பவர் என்னென்ன மறுப்புகள் கூறக்கூடும் என யானே கற்பனை செய்து, அம்மறுப்புகளுக்கு மறுப்பு கூறத் தொடங்குகிறேன்:

மறுப்பு-1:- புராணம் என்பது, பழம் பெருமைகளை - பழைய வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறும் நூலாயிற்றே! திருவாசகத்தில் அப்படி என்ன உள்ளது? மிகச் சிறிய ஒரு நூல் புராணம் ஆகுமா? புராணத்தின் தகுதிகள் அதற்குண்டா?

மறுப்புக்கு மறுப்பு:- ஐம்பதுபகுதிகள் கொண்ட திருவாசகம் என்னும் முழுநூலும் புராணம் ஆக முடியாத போது, முற்பகுதியில் முன்னுரைபோல் உள்ள ஒரு பகுதி மட்டும் ‘சிவபுராணம்’ என்னும் பெயருக்கு ஏற்றதாக முடியுமா?

மறுப்பு-2:- திருவாசகத்தின் முதற்பகுதி முன்னுரையாயின், நூல் முழுதும் திட்டமிட்டு ஒருசேர எழுதப்பட்டிருக்க வேண்டுமே. அப்படி எழுதியதாகத் தெரியவில்லையே. திருவாசகத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு ஊரில் எழுதப்பட்டதாகத் தெரிகிறதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/74&oldid=1107080" இருந்து மீள்விக்கப்பட்டது