பக்கம்:வாழும் வழி.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வாழும் வழிஉடல் நலம் இல்லாதிருப்பவரை, உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் - அல்லது காயலாவா இருக்கிறார் என்றெல்லாம் கடலூர்ப் பக்கத்தினர் சொல்லுவர் - ஆனால் இங்கோ, ‘நோவா இருக்கிறார்’. என்று சொல்லும் வழக்கு மிகவும் காணப்படுகிறது.

ஏதாவது ஒன்றைத் தொடங்கியாயிற்று என்று குறிப்பிடுவதற்காக, ஆரம்பிச்சாச்சு அல்லது தொடங்கி யாச்சு என்று சொல்வதற்குப் பதிலாக, ‘தோக்கியாச்சு’ (துவக்கியாயிற்று) என்னும் வழக்கு இங்கே பெரு வரவிற்று.

இங்கே எளிய மக்கள், வம்புக்கிழுத்தல் சண்டை போடுதல் என்னும் பொருளில் ‘சண்டை வாங்குதல்’ என்னும் தொடரைக் கையாள்கின்றனர். ‘என்னிடம் சண்டை வாங்காதே’ ’ஏன் என்னிடம் சண்டை வாங்குகிறாய்’ என்றெல்லாம் எளிய மக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்கலாம்.

சோப் (Soap) என்பதனை, ‘சவுக்காரம்' என்னும் சொல்லால் குறிப்பிடும் பழக்கம் சிலரிடம் உண்டு.

‘இடம்‘ என்னும் சொல்லை ’வெடம்’ என்று கொச்சையாக ஒலித்துப் பேசும் பழக்கமும் சிலரிடம் உண்டு.

‘மேசையின் கீழே இருக்கிறது என்பதற்குப் பதிலாக ‘மேசையின்தாழ இருக்கிறது’ என்கின்றனர் சிலர்.

‘அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்’ ‘அவனிடம் திட்டு வாங்கினான்’ என்பவற்றுக்குப் பதிலாக, ’அவன் கையில் பேசிக்கொண்டிருந்தேன்’-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/94&oldid=1109578" இருந்து மீள்விக்கப்பட்டது