பக்கம்:வாழையடி வாழை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசு கண்ணதாசர்

133

கவிஞர் அவர்கள் எழுதிய முதற்பாட்டு, 1944 ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் 'திருமகள்’ இதழில் வெளி வந்தது. ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அந்தக் கவிதையிலேயே கவிதை யழகு விஞ்சி நிற்பதனைக் காணலாம். கவிதையின் தொடக்கமே சிறக்க அமைந்திருக்கக் காணலாம்.


       'காலை குளித்தெழுந்து
        கருஞ்சாந்துப் பொட்டுமிட்டுக்
        கருநாகப் பாம்பெனவே
        கார்க் கூந்தல் பின்னலிட்டுக்
        காத்திருந்தேன் உம்வரவைக்
        கடைக்கண்ணால் பார்த்திருந்தேன்!
        கண்ணில் தெரிந்திலிர்நீர்?
        கனவுலகில் சஞ்சரித்தேன்!
        அந்தி மயங்க
        அடிவானம் செக்கரிட
        அண்டை அறியாமல்
        ஆடவர்நீர் ஓடிவந்தீர்!’

என்று, காதலி காதலனுக்கு எழுதும்; கடிதம் போல் அமைந்துள்ள இப்பாடல், கருத்தாழம் கொண்ட தாகும்.


'கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
        காற்றையும் வான வெளியையும் சேர்த்து'

தமிழ்ப்பெருங் கவிஞர்கள் செந்தமிழில் தீஞ்சுவைக் காவியங்கள் இயற்றியளித்ததாகப் பாரதியார் கூறு கின்றார், கவிஞர் கண்ணதாசர் அவர்களின் மாங்கனி’ என்னும் காவியம் பல்சுவை விரவியது என்று உறுதி யாகச் சொல்லலாம். காவியத்திற்கு முன் எழுதும் “தமிழ் வாழ்த்தில்,


‘தனைப்புகழத் தன்னிடத்தோர் சொல்வில் லாத
தமிழேஎன் தாயேநின் பாதம் போற்றி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/135&oldid=1338784" இலிருந்து மீள்விக்கப்பட்டது