பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 இருந்தன. அவன் பல இடங்களுக்கும் சென்று மேலும் மேலும் பொருளையும் புகழையும் சம்பாதித்து வந்தான். இத்தனே இருந்தும் கேசவ பாகவதருக்கு மனத் திருப்தி கிடையாது. ஆசான் மெச்சிய மாளுக்கன் இல்லை; மாமியார் மெச்சிய மருமகள் இல்லை என்பதுபோல எப்பொழுது பார்த்தா லும் ஏதாவது தொன தொன வென்று சொல்லிக் கொண்டே இருப்பார். "அந்தக் காலத்திலே காங்கள் சங்கீத அப்ஜியாசம் செய்த போது குருகுல வாசம் செய்த முறை என்ன விடியற்காலம் உட் கார்ந்து சாதகம் செய்த அழகு என்ன, குருவினிடமும் பெரியவர்க ளிடமும் வைத்திருந்த பக்தி என்ன, மரியாதை என்ன; ஒவ்வொரு சிறு விஷயத்தையுங்கடடக் கிாகிப்பதற்காகப் பட்டயாடு என்ன; அடேயப்பா அந்த நாள் எங்கே, இந்த நாள் எங்கே? இந்தக் காலத்துக் கு ரு ம . i க .ே ௗ ர, அவர்கள் போதிக்கிற முறையோ, சிஷ்யர்களோ, அவர்கள் கிரகிக்கிற முறையோ ராம ராமா ஒன்றும் சொல்லவே தேவையில்லே. எல்லாம் நுனிப் புல் மேய்கிற விஷயங்தான். காலு வர்ணம், இரண்டு உருப்படி, இரண்டு மூன்று ராகங்கள், தப்பும் தவறுமான ஸ்வா வரிசைகள் இவைகளே கெட்டுருச் செய்துகொண்டு ஏதாவது ஒரு பட்டத்தை யும் தனக்குத் தானே சூட்டிக்கொண்டு சபைக்கு வந்து விடுகிருர் க்ள். அவர்கள் தாம் அப்படி என்ருல் அவர்களே ரவிப்பவர்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். ஜிலுஜிலுப்பாக இரண்டு சில்லரை உருப்படிகளேப் பாடினல் போதும்; புதையலைக் கண்டு விட்டதுபோலப் படபடவென்று கை தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். முன்னெல்லாம் காங்கள் மணிக் கணக்கிலே உட்கார்ந்து ரத்த வேர்வை வேர்க்கத் தொண்டை கிழியக் கத்துவோம். அப்படியும் எங்களுக்கு ஆத்ம கிருப்தி ஏற்படாது. கேட்பவர்களோ லேசாக்க் கூடத் தலையை அசைக்க மாட்டார்கள். அன்று அத்தனே கடின மாக இருந்த கல்ை இன்று இத்தனை சுலபமானதாக ஆகிவிடடது. பாடுபவர், கேட்பவர் இவர்கள் விஷயம் இப்படி ஒருபுறம் இருக்க இதைப்பற்றி விமரிசனம் செய்பவர்களோ - அவர்களுக் கும் சங்கீதத்துக்கும் ஸ்கானப் பி ரா ப் தி கூட இராது. ல் அவர்கள் வசம் ஏதாவது ஒரு பத்திரிகை அகப்பட்டுக் கொண்டு விழிக்கும். சில வருஷங்களுக்கு முன்பெல்லாமாவது சில விமரிசகர்கள் ஒரு வழியைக் கையாண்டார்கள். அதாவது ஒரு சங்கீத வித்வான்; அவ்ருக்கு அகிருஷ்டப் பஞ்சை. அவ்ரைக் கை யி லே போட்டுக் கொண்டு கல், அரை கையிலே கொடுத்தும் கர்பி, பலகார்ம் வாங்கிக் கொடுத்தும் அவரைத் திருப்தி செய்து வைத்து அவரிடமிருந்து 3 - -