பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பது யார் என்று கவனிக்க முயலும்போது செளதாமினி அங். கிருந்து குதூகலத்துடன் குதித்து ஓடிவந்தாள். 'அம்மா!...சித் தப்பா வந்திருக்கா அம்மா...' என்ருள். சித்தப்பா என்ற சொல் செளதாமினியின் வாயிலிருந்து வெளிப்பட்டதும், உள்ளே அறைகளின் வலியும் சொல்லின் வேதனையும் தாளாமல் ւ{Gի வாய்த் துடித்துத் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்த ராஜங் கடடச் சட்டென்று அழுகையை கிறுத்தினுள்; கண்களைத் துடைத் துக் கொண்டு முன்புறம் வந்தாள். வந்திருப்பது ரமணி அல்ல; பூநீநிவாசன் என்பதை அறிந்தபோது அவ்ஸ் உள்ளம் மீண்டும் சூன்யத்தால் கிரம்பிப் போயிற்று. - - பூநீங்வாசன் உள்ளே வந்தான். எல்லோருடனும் கலகல வென்று சிரித்துப் பேசினன். குழந்தைகள் அவ்னேச் சூழ்ந்து கொண்டு கும்மாளமிட்டனர். சுந்தரேசனும் சகஜமாகப் பேசிக். கொண்டிருந்தார். அவர் தன்னிடம் வந்து ராஜ்த்தைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லையே என்று லட்சுமிக்குக் குறை. ராஜத்திற். குக் கூட அதே மாதிரி குறை உண்டு. ஆனல் சுந்தரேசன் மிகவும். அமரிக்கையாகவேதான் நடந்துகொண்டார். . இரவு சாப்பாடு கடந்தது. ஸ்கிரீகளும் சாப்பிட்டான பிறகு சுந்தரேசன் ஒரு முறை தொண்டையைக் கனேத்துக்கொண்டு, அம்மா, ராஜம் உன்னுடைய துணிமணிகளே எல்லாம் எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக்கொள்' என்ருர். பூநீநிவாசனத் தவிர் எல்லோரும் கிடுக்கிட்டுப் போனுர்கள். ஆஞ்ல் வாய் கிற்ந்து எது வும் கேட்கவில்லை. சுந்தரேசன் மிகவும் கிதானமாக வாசற்புறம் ப்ார்த்து, யாரடா அங்கே?...வேலு வ்ண்டியைப் பூட்டு' என்ருர். வேலு வண்டியைப் பூட்டினன். ராஜம் துணிமணிகளைப் பெட்டியிலே எடுத்து வைத்துக் கொண்டாள். ரீநிவாசன் சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினன். ராஜம் சுந்தரேசனே யும் லட்சுமியையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டாள். அவள் கன்னங்களில் முத்துப்போல் கிரண்டு நின்ற கண்ணிர்த் துளிகள் சுந்தரேசனின் நெஞ்சிலே ரத்தத் துளிகளாக உருப் பெற்றன். மார்பைக் கையால் அழுத்திக் கொண்டு தெருவுக்குப் போய்விட் டார். ராஜம் வந்து வண்டியிலே ஏறிக் கொண்டாள். பூநீநிவாச னும் ஏறிக் கொண்டான். வண்டி புறப்பட்டது. சுந்தரேசன் நெடுமூச் செறிந்தார். பூநீகிவாசா குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்...அம்மா, ராஜம்!... சமத்தாய். இரு-” என்ருர் துக்கம் தொண்டையை அடைக்க. அவர் வார்த் ஒதகள் பூர்த்தி பெறுமட்டும் காத்கிருக்கவில்ல்ை அந்தத் துரிசான காளேகள். விறுக்கென்று கிளம்பிப் பாய்ந்தோடிச் சென்றன.