பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

## 6 வாழ்க்கைச் சுவடுகள் 'சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதானே வாழ்க்கையின் நோக்கம்? எழுதிக்கொண்டிருப்பது எனக்கு சந்தோஷம் தருகிறது. கடிதங்கள் எழுதுவது என் சந்தோஷங்களை அதிகப்படுத்துகிறது என்று சொன்னேன். 'உங்கள் எழுத்துக்களைப் புத்தகங்களாகக் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படவில்லையா? என்று நண்பர் வேறொரு சமயம் கேட்டார். 'காலம் வருகிறபோது அவை வந்துவிட்டுப் போகட்டும் வெறுமனே ஆசைப்படுவதால் மட்டும் காரியங்கள் நடந்துவிடுவதில்லை. மேலும், முயற்சிகள் எப்போதும் உரிய பலன்களைப் பெற்றுத் தருவதுமில்லை' என்றேன். என் எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறவேண்டும் என்று எண்ணத்துடன் நான் மேற்கொண்ட சில முயற்சிகளின் நிலைமை அப்படித்தான் இருந்தது. நான் 1944 ஆரம்பத்தில் சென்னையில் நவசக்தியில் தங்கியிருந்த போது ஒருநாள் அல்லயன்ஸ் கம்பெனி' குப்புசாமி அய்யரைக் கண்டு பேசினேன். அவர் தமது நிறுவனம் மூலம் நல்ல நல்ல புத்தகங்களை வெளியிட்டு வந்தார். தமிழ் நாட்டுச் சிறுகதைகள்' என்ற வரிசையில் தொடர்ந்து பல எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் புத்தகங்களாகப் பிரசுரித்தார். பலபேர்களின் சிறுகதைகளைத் தொகுத்துப் பெரிய புத்தகமாகக் கதைக் கோவை' என்றும் வெளியிட்டார். என்னுடைய கதைகளையும் புத்தகமாக வெளியிட இயலுமா என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் மகிழ்வுடன் இணங்கிக் கதைகளைக் கொடுங்கள் என்றார். நான் பதினைந்து கதைகளைத் தொகுத்து அவரிடம் அளித்தேன். அவற்றில் பட்டாசுக்கட்டு என்றொரு கதை இருந்தது. அந்தப் பெயரிலேயே கதைத் தொகுதியை வெளியிடலாம் என்று அவர் கூறினார். வெளிவர இருக்கும் நூல்கள் பற்றிய விளம்பரங்களில் அந்தப் பெயரும் இடம் பெற்றது. ஆயினும் வருடங்கள் பல ஒடியும் என் சிறுகதைத் தொகுப்பு பட்டாசுக்கட்டு வெளிவரவேயில்லை. துறையூரில் பாரதமாதா பிரசுரம் என்றொரு வெளியீட்டு நிறுவனம் இருந்தது. கருப்பையா என்பவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். இந்திரா பத்திரிகையில் ஆசிரியர் ப. நீலகண்டன் எழுதிய கம்பராமாயணக் கட்டுரைகளைக் கோசலை செல்வன்' 'மிதிலைச் செல்வி' என்ற இருபுத்தகங்களாக வெளியிட்டிருந்தார். சிரஞ்சீவி எனும் எழுத்தாளரின் கதைகளையும் வேறு சில புத்தகங்களையும் அவர் பிரசுரித்திருந்தார். நான் திருநெல்வேலியில் இருந்தபோதே என்னை அறிமுகம் செய்து கடிதம் எழுதி என் கதைகளைப் புத்தகமாக வெளியிடுவீர்களா? என்று கேட்டேன். அவர் சம்மதித்துக் கதைகளை அனுப்பச் சொன்னார். பன்னிரண்டு கதைகள்