பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 盟芝悠 எனவே, மூன்றாவது பதிப்பு அச்சிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இப்போது புத்தகத்தின் விலையை ஆறணாவாக நிர்ணயித்தோம். லாபம் பெரிதல்ல எண்ணங்கள் எங்கும் பரவவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. அச்சகத் தோழர்கள் கூட்டுச் சேர்ந்து 'எரிமலைப் பதிப்பகம்' என்ற பெயரில் புத்தக வெளியீட்டு முயற்சியைத் தொடங்கினார்கள். அதன் முதல் வெளியீடாக கோரநாதன் புத்தகத்தையே பிரசுரிக்க ஆசைப்பட்டார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகச் சினிமாவில் கடவுள்கள் என்ற சிறுநூலை எழுதிக் கொடுத்தேன். இதுவும் மூன்று பதிப்புகள் பிரசுரம் பெற்றது. - சாந்தி நிலையம் வெளியீடுகளாக ஈட்டிமுனை, அடியுங்கள் சாவுமணி ஒடிப்போனவள் கதை ஆகியவை பிரசுரிக்கப்பட்டன. சாந்தி நிலையம் என்னுடைய எழுத்துக்களைப் புத்தகங்களாக்குவதற்காகவே அமைக்கப்பட்டது. தோழர்களின் கூட்டுமுயற்சியான எரிமலைப் பதிப்பகம் பலபேர்களது எழுத்து முயற்சிகளையும் புத்தகங்களாக்கி வெளியிடும் நோக்குடன் அமைந்தது. எனவே, அப்போதுதான் எழுத்தில் ஆர்வம் கொண்டு சிந்தனை நூல்கள் எழுதுவதில் ஊக்கம் காட்டிய திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்களின் எழுத்துக்களை அச்சகத் தோழர்கள் வரவேற்றுப் புத்தகங்களாக்கினார்கள். சாணக்கியன் செயல்களைக் கண்டித்தும் விமர்சித்தும் மு. கருணாநிதி எழுதிய பலிபீடம் நோக்கி என்ற நாடகம், புராணகாலக் கடவுளர்கள் பற்றித் தில்லை வில்லாளன் எழுதிய 'சாவோலை முதலிய சிறுநூல்கள் எரிமலைப் பதிப்பகம் வெளியீடுகளாக வந்தன. சி.என். அண்ணாதுரை எழுதித் திராவிட நாடு இதழில் வெளிவந்த கட்டுரை, கதைகள் சிலவற்றையும் தோழர்கள் புத்தகமாக்கி வெளியிட்டார்கள். அப்படிப் பிரசுரம் செய்தவற்றில் 'எட்டுநாட்கள்' என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்தது ஆகும். இவ்விதமாக, சாதாரண ஊராக இருந்த துறையூர் பலவகைகளில் முக்கியத்துவம் பெறுவதற்குக் காலம் வகைசெய்தது. 19 துறையூருக்கும் திருச்சிக்கும் இடையே 28 மைன் துரம் தனியா கம்பெனி ஒன்று பஸ் விட்டுப் போக்குவரத்துக்கு உதவிக் கொண்டிருந்து இரண்டே பஸ்கள் புத்த காலம் என்று பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக அநேக பஸ்கள் கரிவண்டிகளாக மாற்றப்பட்டிருந்தன. பஸ்ஸின் பின் பக்கம் பாய்லர் போன்ற அமைப்பு இருக்கும். அதில் கரித்துண்டுகளைப் போட்டு நிரப்பி, நெருப்பு வைத்து சூடேற்றுவதற்காக ஒரு