பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் H35 டி.ஆர். நடராஜன் பல பத்திரிகைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். இச்சமயத்தில் 'தினத்தந்தியில் தலையங்கம் எழுதும் பொறுப்பை ஏற்றிருந்தார். அது மட்டும் தான் அவரது வேலை. குறிப்பிட்ட நேரத்துக்குப் போய், தினந்தந்தி ஆபீசில் இருந்து, பத்திரிகைகளைப் படித்து முக்கியச் செய்திகளை அறிந்து, அன்றைக்கு எதைப் பற்றித் தலையங்கம் எழுதுவது எனத் தெரிந்து எழுதிக் கொடுத்துவிட்டு வரவேண்டியது தான். சில மணி நேர வேலை. அவர் ஒரு உற்சாகி. பரந்த அனுபவ ஞானம் உடையவர். எம்.என். ராய் அரசியல் கொள்கைகளில் ஆர்வம் காட்டி வந்தார். தமாஷாகவும் கிண்டலாகவும் பேசி மகிழ்வார். சிறிது காலத்துக்குப் பிறகு அவர் தினமணி கதிரில் - துமிலன் ஆசிரியராக இருந்த போது சேர்ந்து பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் சி.சு. செல்லப்பாவும் 'தினமணி'யில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நடராஜன் அடிக்கடி எங்களோடு ரயிலில் வந்தார். சினிமா உலகம் ஆபீசிலும் பல்லாவரம் அறையிலும் பொழுதுபோக்கினார். நிலா காயும் இரவுகளில் எட்டு-எட்டரை மணிக்குப் புறப்பட்டு ரயிலில் பயணம் செய்து மீனம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கி, ரோடு வழியாக நடந்து பல்லாவரம் அறைக்கு வருவோம். சும்மா உல்லாச உலா ரயிலிலும் கூட்டம் இராது. ரோடின் வெறிச்சிட்ட தனிமையும், மரங்களினூடே பாய்ந்து தரை மீது வந்து படியும் நிலவின் ஒளியும், சுற்றுப்புற மோகனத் தோற்றமும் மனோகரமாக இருக்கும். இப்படி ஆறு மாதங்கள் பல்லாவரத்தில் கழித்தோம். கட்டிடத்தை இடித்துப் புதுப்பிக்கப் போகிறோம் அறையைக் காலி செய்யுங்கள் என்று ஒட்டல்காரர் கூறியதால், பல்லாவரம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது நாரண, துரைக்கண்ணன் உதவிபுரிந்தார். அவர் வசித்த கோடம்பாக்கம்- செளராஷ்டிர நகரில் ஒரு வீடு இருக்கிறது என்று தெரிவித்து. வேண்டிய உதவி செய்தார். அவர் குடியிருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் இருந்தது அந்த வீடு, நீளமான பெரிய வீடு. ஐந்து தனிவீடுகளை வரிசையாகக் கொண்ட நீள அமைப்பு. ஒயிட் ஹவுஸ் என்று பெயர் பெற்றிருந்தது. ஓரத்து வீட்டில் நாங்கள் குடிபுகுந்தோம். வாடகை மாதம் நாற்பது ரூபாய் விசாலமான இடம். கீழ்ப்பகுதியும் மாடியும் மிக வசதியாக இருந்தன. கீழே நாங்கள் புழங்குவதில்லை. அண்ணா. நான், தி.க.சி. மூன்று பேர்தான். மாடிப் பகுதியில் இடம் வெகு தாராளமாக இருந்தது. அதே தெருவில் சில வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் அறிஞர் சாமி சிதம்பரனார் வசித்தார். அவருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. 1948இல் சினிமா உலகம் அலுவலகத்தில் தங்கியிருந்தபோதுதான். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சி நடந்தது. பாரதி விடுதலைக் கழகம்