பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 夏霹雳 திருநெல்வேலியில் செல்லம்மா பாரதியும் தங்கம்மா பாரதியும் குழுவினரை வரவேற்று மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கடிதம் எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தார்கள். அந்நாளில் நகரசபைத் தலைவராகப் பொறுப்பு வகித்த பரா.வும் பராமஸ்வாமி குழுவோடு சேர்ந்து கொண்டார். மணிக்கொடி இலக்கிய இதழின் இறுதிக்கட்ட ஆசிரியராகச் செயலாற்றியவர் அவர் பின்னர் நவயுகப் பிரசுராலயம் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நிர்வகித்து நல்ல நூல்களை வெளியிட உதவிய எழுத்தாளர். மாக்சிம் கார்க்கியின் மதர்' நாவலை 'அன்னை' என்ற பெயரில் மொழிபெயர்த்துப் புத்ததகமாக வெளியிட்டிருந்தார். அதையே அவர் நாடகமாக எழுதி, ஒரு குழு அமைத்து மேடைகளில் நடிக்க வைத்து, 'தாய் நாவலுக்கு மேலும் பெருமை சேர்த்ததையும் குறிப்பிட வேண்டும். அவர் குழுவினரை வாழ்த்தி வழி அனுப்பினார். பாரதி நூல்களை வெளியிட்டுவந்த பாரதி பிரசுராலயம் உரிமையாளர் பாரதியின் சகோதரர் சி. விஸ்வநாதன் அவர்களும் ஒப்புதல் கடிதம் தந்தார். பாரதி குடும்பத்தாரின் இசைவுக் கடிதங்களைப் பெற்றதும் முதலமைச்சர் ராமசாமி ரெட்டியார் ஏவி. மெய்யப்ப செட்டியாரை வரவழைத்துப் பேசினார். பாரதி பாடல்களின் உரிமையை முதலில் குஜராத் சேட் ஒருவர் பெற்றிருந்தார். அவருக்குக் கணிசமான ஒரு தொகை கொடுத்து உரிமையை ஏவிஎம் செட்டியார் வாங்கியிருந்தார். இருப்பினும் இப்போது பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலே, தம்மிடமிருந்த பாரதிபாடல்களின் உரிமையை மனமுவந்து விட்டுக்கொடுத்தார் செட்டியார். பாரதியார் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அதைக் கொண்டாடும் வகையில் பாரதி விடுதலைக் கழகம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு சிறு விழா நடத்தியது. இடைக்காலத்தில் கழகத்தின் தலைவராக எழுத்தாளர் வரா. பொறுப்பேற்றிருந்தார். அவரே இவ் விழாவுக்கும் தலைமை தாங்கினார். நோக்கம் நிறைவேறியது. கடமை முடிந்த மனநிறைவுடன் பாரதி விடுதலைக் கழகம் கலைக்கப் பெற்றது. மகாகவி பாரதியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின்னர், பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் பாரதியாரின் கவிதைகளையும் இதரப் படைப்புகளையும் விதம் விதமான பதிப்புகளாக வெளியிடுவதில் ஆர்வம் காட்டலாயினர். திரைப்படங்களிலும் பாரதி பாடல்கள் தாராளமாக இடம்பெறத் தொடங்கின. 21 1948-49இல் நிகழ்ந்த மற்றொரு முக்கிய விஷயம் பற்றியும் சொல்ல வேண்டும். மீண்டும் திரைப்படத் துறை என்னை அழைத்த விவரம் அது .