பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f43 வாழ்க்கைச் சுவடுகள் 'ஆயிரம் தானா தந்தார்? இது குறைவான தொகை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?' என்று அவர் விசாரித்தார். 'இல்லை. நான் எதுவும் நினைக்கவில்லை' என்று சொன்னேன். அவர் சிரித்தார் 'பார்க்கப் போனால், நீங்கள் பத்துப் பன்னிரண்டு கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினாலும், உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற நிச்சயம் எதுவும் இல்லை. இப்ப நீங்க கொஞ்சம் எழுதிக் கொடுத்ததற்கு மொத்தமாக ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறதே. இதற்காகச் சந்தோஷப்படலாம் என்று நண்பர் விவரித்தார். சில தினங்களுக்குப் பிறகு, லைலா மஜ்னு படத்தைத் திரையிட்டுப் பார்க்கப் போகிறார்கள் வாங்க என்று மூர்த்தி அழைத்துப் போனார். படம் பார்த்தேன். திருப்திகரமாக இருந்தது. ஆரம்பத்தில் பெயர்கள் வரிசையாகக் காட்டப்பட்டபோது, வசனம் வல்லிக்கண்ணன் என்று தனியாகக் காட்டப் பெற்றது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. பொய்யான கவுரவம்-போலிப் பெருமை என்றே என் மனம் முனகியது. உண்மையில் இந்தப் படத்தின் வசனம் முழுவதையும் நான் எழுதவில்லை. பலபேர் எழுதியுள்ளனர். நான் ஒருசில காட்சிகளுக்கு மட்டுமே எழுதினேன். அப்படியிருக்கையில், வசனம்வல்லிக்கண்ணன் என்று சொல்வது நியாயமேயில்லை. நாகூர், பணம் குறைவாகக் கொடுத்துவிட்டோமே என்று நினைத்து, தமது மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக இப்படி அறிவித்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். நாகூர் அத்துடன் ஒதுங்கிவிடவில்லை. திடீரென்று ஒருநாள் வந்தார். 'சினிமாத் துறையில் நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். என் நண்பர் லாவண்யா பிக்சர்ஸ் அதிபர், பாரிஜாதம் என்ற படம் பிடிக்கிறார். அதற்கு வசனம் எழுதுவதற்கு தகுந்த ஆள் வேண்டும் என்று சொன்னார். நான் உங்கள் பெயரைச் சொல்லியிருக்கிறேன், வாங்க, நான் உங்களை அவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்' என்ற கூறி அழைத்துப் போனார். லாவண்யா பிக்சர்ஸ் அதிபரிடம் அறிமுகம் செய்துவிட்டு, அவர் சொன்னார். எனக்கு வேறே வேலை இருக்கு. நான் அப்புறம் பார்க்கிறேன்.' என்று சொல்லிப் போய்விட்டார். 'பாரிஜாதம்' படத்துக்காக அன்று ஏதோ ஷூட்டிங் என்று திட்டமிடப்பட்டிருந்தது போலும் நடனக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பன்னிரண்டு பெண்கள் வந்தார்கள். பால் சப்ளை செய்கிற ஒருவர், எத்தனைக் குடம் பால் வேண்டும் என்று கேட்டபடி நின்றார். முதலாளி, இன்று ஷட்டிங்