பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வாழ்க்கைச் சுவடுகள் என்னிடம் கதை கட்டுரைகள் வாங்கி சிங்கப்பூருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்கள் இது தொடர்ந்து நிகழ்ந்தது. 1950.1951 ஆகிய இரண்டு வருடங்கள் நான் 'ஹனுமான் இதழுக்காக உழைத்தேன். மேலும் வீண் உழைப்பு உழைக்க நான் விரும்பவில்லை. ஹனுமான் ஒப்பேறாத நோயாளி என்று அதை விட்டு விட்டேன். அப்போது வை. கோவிந்தனின் சக்தி மாத இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த விஜயபாஸ்கரன் ஹனுமானுக்காகவும் உழைக்க முன்வந்தார். சிறிது காலம் பாடுபட்டார். முடிவில் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது வீண்வேலை என்று அதன் நிர்வாகிகளே முடிவுகட்டி, பிரசுரத்தை நிறுத்திவிட்டார்கள். விஜயபாஸ்கரன் 'விடிவெள்ளி என்ற பெயரில் மாதம் இருமுறை இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அரசியல், பொருளாதார விஷயங்களுடன் கலை இலக்கிய விஷயங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. விறுவிறுப்பான விஷயங்களைக் கொண்ட அந்தப் பத்திரிகை நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் அது வெகுகாலம் நடக்கவில்லை. பொருள் இழப்பு அதிகமானதும் விஜயபாஸ்கரன் அதை நிறுத்திவிட்டார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு தான் அவர் சரஸ்வதி பத்திரிகையை ஆரம்பித்தார். அது 1955இல், நான் ஹனுமான்' பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. எனது 'விடியுமா? நாடகத்தைச் சில தோழர்கள் இரண்டுமுறை மேடையேற்றினார்கள். 1948இல் நான் 'விடியுமா? என்ற அந்த நாடகத்தை எழுதியிருந்தேன். அதை எம். சூரி புத்தகமாக வெளியிட்டார். இலட்சிய நோக்குடன் எழுதப்பட்ட நாடகம் அது இலட்சியவாதியான கதாநாயகன் உயர்ந்த சிந்தனைகளையும் கொள்கைகளையும் பேசும் வசனங்களை அதிகம் கொண்ட நாடகம். சிறிது சம்பவங்களும் உண்டு. அதை மேடையில் நடிக்க ஆசைப்பட்டார் வாத்தியார் வரதராஜன் என்பவர். நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் உடைய இளைஞர்கள் பலரைச் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து நாடகங்களை அரங்கேற்றுவதை உபதொழிலாகக் கொண்ட பலர் சென்னையில் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நாடகக் கலையை உய்விக்க வேண்டும் என்கிற உயர்நோக்கம் எதுவும் கிடையாது. சினிமாவில் சேர்ந்து நடித்துப் பணமும் பெயரும் சுகபோக வாழ்வும் பெற வேண்டும் என்ற ஆசை உள்மன உந்துதலாக இருந்தது. ஏதாவது ஒரு நாடகத்தைப் பயின்று எப்படியாவது மேடை ஏற்றி நடித்து விடுவது. அந்த நாடகத்துக்குச் சினிமாத் துறைப் பிரபலங்களில் எவரையாவது