பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠覆& வாழ்க்கைச் சுவடுகள் பல இடைஞ்சல்களையும் தாண்டி வந்துதான் நண்பர்கள்எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள் மற்றும் பலரும்- என்னைச் சந்தித்துச் சென்றார்கள். சோலை ட்ரஸ்ட் பொதுச் செயலாளர் ஆர்.டிராஜனும் வந்து, பார்த்து, வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சோலை இயக்கம், அது செய்து வருகிற சமூகநலப் பணிகள், நடத்துகிற பத்திரிகை பற்றி எல்லாம் சென்னார். அவர்களது திட்டத்தின்படி எழுத்தாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதும் ஒரு முக்கிய நோக்கம் ஆகும். வணிகப் பத்திரிகைகளும், அவற்றில் எழுதுகிறவர்களும் சமூகச் சீர்கேடுகளுக்கும் பண்பாட்டுச்சிதைவுக்கும் வழி செய்கிறார்கள். நச்சு எழுத்துக்களின் மூலம் மக்கள் மனசைக் கெடுத்து மக்கள் கலாச்சாரத்தை மாசுபடுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் விமர்சித்தும் கண்டித்தும் சோலை இயக்கம் கூட்டங்கள் நடத்துகிறது. எழுத்தாளர்கள் நல்லமுறையில், சமூக உணர்வோடு எழுதி, மக்களின் வாழ்க்கையை வளம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. ஜெயகாந்தன் மற்றும் சில முக்கிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு நல்ல ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்கள். அடுத்த கூட்டத்தை ஜனவரியில் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம். நீங்கள் வந்து அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ராஜன் கேட்டுக் கொண்டார். நான் இசைவு தெரிவித்தேன். 1986 ஜனவரியில் கிறிஸ்டியான்பேட்டையில் நிகழ்ந்த கூட்டத்துக்குப் போனேன். கவிஞர் இன்குலாப், மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இலக்கியம் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற கருத்து அனைவராலும் வலியுறுத்தப்பட்டது. பின்னர், செயலாளர் ஆர்.டி.ராஜன் தீவிரமாக முயன்று, தமிழ்நாட்டின் பல பகுதியிலும் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, 1986 ஜூன் மாதம் மதுரையில் பெரிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். சமூக மேம்பாட்டுக்கான கலை இலக்கியக் கலாச்சார வளர்ச்சிக்குச் சமூக உணர்வோடு செயலாற்றும் எழுத்தாளர்கள் - பொதுவாக எழுத்துத்துறையில் புதிதாக ஈடுபட்டுள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள்-சிற்றிதழ் ஆசிரியர்கள் கூடியிருந்தனர். சுமார் நூறுபேர் இருக்கும். தற்கால எழுத்தாளர்கள், பத்திரிகைகளின் தன்மைகள் போக்குகள் பற்றியும், வாசகர்களின் தரத்யுைம் ரசனையையும் திட்டமிட்டுச் சிதைத்துச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் வணிக நோக்குப் பத்திரிகைகளின் செயல்பாடுகள் குறித்தும் காரசாரமான பேச்சக்கள் ஒலிபரப்பப்பட்டன. வெகுஜனப் பத்திரிகைகளின் போக்கை எதிர்த்து, ஆரோக்கியமான-சமூக மேம்பாட்டுக்கான- எழுத்துக்களை வளர்க்கும்