பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 வாழ்க்கைச் சுவடுகள் மேலும், தொண்ணுறுகளில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் என்னைப் பாராட்டி விருதுகள் அளித்தும் பணமுடிப்பு வழங்கியும் பெருமைப்படுத்தியுள்ளன. சென்னை சிந்து பதிப்பகம் தமிழ்ப்பணி விருது அக்னி அமைப்பின் அட்சர விருது, நடிகர் கமல்ஹாசனின் அன்னை ராஜலட்சுமி நினைவு விருது, ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையின் ராணா இலக்கிய விருது, சேலம் அசோக்குமார் சிந்தனையாளர் மன்றம் தமிழ்ப்பணி விருது என்று பல அன்புடன் எனக்கு வெவ்வேறு வருடங்களில் தரப்பட்டுள்ளன. 2000 ஆண்டில் ஆழ்வார்கள் ஆய்வுமையம் கலைஞர் விருதும் பொற்கிழியும் வழங்கி என்னைக் கவுரவித்தது. - தமிழ்ச் சான்றோர் பேரவை ஆறாவது தமிழகப் பெரு விழாவை 2000 நவம்பர் 1, 2 தேதிகளில் திருநெல்வேலியில் வெகுசிறப்பாகக் கொண்டாடியது. அப்போது தமிழ்ச்சான்றோர் அறுவருக்கு விருதும் பத்தாயிரம் ரூபாய் புணமும் வழங்கி பெருமைப்படுத்தியது. அவ்ஆறு பேர்களில் நானும் ஒருவன். மற்றவர்கள் தி.க, சிவசங்கரன், தொ.மு.சி. ரகுநாதன், அறிஞர் சி.சு.மணி, மணவை முஸ்தபா, கவிஞர் மீரா ஆவர். தொழில் அதிபர்களும் செல்வர்களும் தமிழ்மொழிமீது பற்றுதல் கொண்டு இலக்கியத்தின்மீதும் எழுத்தாளர்கள் பேரிலும் கவனம் செலுத்தி அவர்களைக் கவுரவித்து வருவது இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மலர்ச்சி ஆகும். அவர்களுடைய நற்பணிகள் போற்றுதலுக்கு உரியவை. இவ்வாறாகக் காலம் என் சந்தோஷங்களை அதிகப்படுத்தியே வந்திருக்கிறது; வருகிறது. 48 எழுத்தாளன் வாழ்க்கையில் எனக்கு எட்பவாவது விரக்தி ஏற்பட்டதுண்டா? திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வதற்காக நான் என்றாவது வருத்தப்பட்டது உண்டா? சதாட்டித்துக்கொண்டே இருக்கிறேனே படிப்பதில் எனக்குச் சவிப்பு உண்டாகவில்லையா? - இப்படிப் பலரும் அவ்வப்போது என்னைக் கேட்கிறார்கள் அரசாங்க வேலையைத் துறந்து விட்டதற்காக, பின்னர் நான் வருத்தப்பட்டது உண்டா? என்றும் கேட்டிருக்கிறார்கள்