பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 45 பரமக்குடியில் என்னுடன் இரண்டு நாட்கள் தங்கினார். பத்திரிகையாளர்கள், சென்னை எழுத்தாளர்கள், லோகசக்தி அனுபவங்கள் என்று சுவாரசியமாகத் தகவல்கள் தந்தார். என் எழுத்தையும் ஆர்வத்தையும் மனமாரப் பாராட்டி விட்டு, "நீங்கள் இருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகம் இல்லை. இப்போது வட்டத் துவாரத்தில் சதுரமுளை எ ஸ்குவேர் பெக் இன் எ ரவுண்ட் ஹோல்' என்பது போல நீங்கள் பொருத்தம் இல்லாத இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இருக்க வேண்டிய இடம் சென்னையில் ஒரு பத்திரிகாலயத்தில், அப்போது தான் உங்கள் திறமை உரிய முறையில் வெளியே தெரியவரும்" என்று கூறினார். சென்னைக்குப் போக வேண்டும் என்ற எனது உள் உந்துதலைக் கிளறிவிட்டுவிட்டு சக்திதாசன் போய்ச்சேர்ந்தார். எனது நாட்கள் வழக்கம் போல் போயின. 1939 நவம்பரில், நான் பரமக்குடி சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவ்வூரைவிட்டுப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. பூரீ வைகுண்டம் அலுவலகத்துக்கு நான் மாற்றப்பட்டேன். 9 திருநெல்வேலி மாவட்டம் பூரீவைகுண்டம் எனக்குப் புதிய ஊர் இல்லை. எனது ஆறு ஏழாவது வயதில் என் அப்பா பெருங்குளம் ஊரில் பணியாற்றியபோது பூரீவைகுண்டம் நன்கு அறிமுகமாகியிருந்தது. திருநெல்வேலியில் இருந்து பூரீவைகுண்டம் வந்துதான் பெருங்குளம் போகவேண்டும். அதேபோல் பெருங்குளத்தில் இருந்து வெளியூர் போகிற போதும் பூரீவைகுண்டம் வரவேண்டும். இப்படிப் பலமுறைகள் அறிமுகமாகியுள்ளது அந்த ஊர் பெருங்குளத்தில் வசித்த போது, அப்பா உத்தியோக விஷயமாக வைகுண்டம் வரநேர்ந்த சந்தர்ப்பங்களில் என் அண்ணாவும் நானும் அப்பாவுடன் அங்கே வந்திருக்கிறோம். அங்குள்ள பெயர்பெற்ற விஷ்ணு ஆலயத்தைக் கண்டு களித்தது உண்டு. பூரீவைகுண்டமும், அதை அடுத்து அருகருகே உள்ள சில தலங்களும் நவதிருப்பதி' என்ற சிறப்புக்கு உரியவை ஆகும். வைகுண்ட ஏகாதசித் திருநாளில் இவ் ஒன்பது கோயில்களில் இருந்தும் பெருமாள்திருஉருவம் கருடவாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு, ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரில் ஒன்று சேர்ந்து வீதி வலம் வருவது வழக்கம். ஒரு வருடம் அத் திருநாளின்போது வில்வண்டியில் பூரீவைகுண்டத்தில் தொடங்கி ஒவ்வொரு திருப்பதியாகச் சென்று கோயில் தரிசனம் கண்டு. இறுதியில் ஆழ்வார் திருநகரி சேர்ந்து கருடவாகன ஊர்வலம் பார்த்தது நன்றாக நினைவில் பதிந்துள்ளது.