பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வாழ்க்கைச் சுவடுகள் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள். உங்களைத் தெரியும் என்று சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள். இன்று மாலை நீங்கள் என்னுடன் நேமத்தான்பட்டிக்கு வாங்க உங்கள் அண்ணனிடமிருந்து பணம் வருகிற வரை எங்களோடு தங்கியிருங்க. பணம் வந்ததும் திருநெல்வேலிக்கே போங்க என்று சுந்தரம் என்னிடம் சொன்னார். அன்று மாலை நான் சுந்தரத்துடன் நேமத்தான்பட்டி போனேன். அண்ணன் தம்பியரான நடராசன், சொக்கலிங்கம் இருவரும், எதிர்பாராத அதிதியான என்னைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். திருநெல்வேலி நெல்லை வாலிபர் சங்கத்தில் அவர்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதன் மூலம் பழகி நண்பர்களானவர்கள். நேமத்தான்பட்டியில் சகோதரர்களுடன் ஆறு நாட்கள் தங்க நேரிட்டது. அவர்கள் இருவரும் தனிவீடு வாடகைக்கு எடுத்து தாங்களே சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு, சிக்கனமாக வாழ்க்கை நடத்தினார்கள். என்னை அன்போடு உபசரித்தார்கள். என் கடிதம் கிடைத்த உடனேயே அண்ணா எனக்கு மணியார்டரில் பணம் அனுப்பிவைத்தார். அது வந்து சேர்ந்ததும் நான் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். 11 பத்து நாட்களுக்குப் பிறகு விடு திரும்பிய என்னைச் சகோதரர்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அம்மாதான் துயரத்தோடு குறை கூறினாள் நாட்கள் எப்போதும்போன் நகரலாயின. யுத்த காலம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் புதிய பத்திரிகைகள் தோன்றிக் கொண்டு தான் இருந்தன. ஆனந்த விகடன் இதழிலிருந்து பிரிந்து சென்ற கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி 'கல்கி' என்ற பெயரிலேயே பத்திரிகை ஆரம்பித்தார். அதன் பின்னர் பத்திரிகை நடத்த முற்பட்ட எழுத்தாளர்கள் சிலர் அவரவர் புனைபெயரைச் சூட்டி இதழ் ஆரம்பிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. மணிக்கொடி சிறுகதை இலக்கிய இதழின் தாக்கம் பெற்றிருந்தவர்கள், மணிக்கொடி மாதிரி ஒரு பத்திரிகை தேவை என்று எண்ணுவதும் பேசுவதும் இயல்பாக இருந்தது. அத்தகைய எண்ணம் கொண்டு ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்க முற்பட்டார். வி.ரா. ராஜகோபாலன் என்ற இளைஞர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் 'ஆனந்த மோகினி' என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் நடத்தினார். சிறிது காலமே வாழ்ந்தது அது அதிலும் எனது கதைகள் பிரசுரம் பெற்றிருந்தன. .