பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வாழ்க்கைச் சுவடுகள் உள்ளே நிசிதி நினைத்தாலே சிரிப்பூட்டும் நிகழ்ச்சி ம.மு.ச. மறக்கமுடியாத றெல்லாம் சிறுசிறு பகுதிகள். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி 、L照 நிசிநி' ஆசிரியர், ம.மு.ச. ஆசிரியர், கேள்வி பதில் ஆசிரியர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோ.த.சண்முகசுந்தரம் வை விட்டு விலகி, தமிழன் இதழில் சேர்ந்திருந்தார். மேதாவி சம்பவம் 5 "., , , , '?, இருட்டது .ேல்ே, - ** தமிழன் மதுரையிலிருந்து வெளிவந்தது. மதுரையிலிருந்து வேறு சில புதுப் பத்திரிகைகளும் வரலாயின. இதனால் எல்லாம் என் மனம் மறுபடியும் குறுகுறுத்தது. இப் புதிய பத்திரிகைகளில் இடம் கிடைக்குமா என்று முயன்று பார்க்கலாமே என்று ஆசைப்பட்டேன். சேலம் வேல்சாமிக்கவி, மாடர்ன் தியேட்டர்சின் ஆதரவோடு சண்டமாருதம் இதழை மேலும் நல்ல முறையில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிகையில் இடம் கிடைத்தால், எனது வளர்ச்சிக்கும் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினேன். - இம்முறை வீட்டில் எல்லோருடைய அனுமதியைப் பெற்றுச் செலவுக்குத் தேவையான பணத்துடன்தான் புறப்பட்டேன். மதுரை எழுத்தாளர்கள் 可可, ஆறுமுகம். ரா. வேங்கடாசலம் விளம்பரப்படுத்தியிருந்த முகவரியில், அவர்களைக் கண்டு பேசலாம் என்று போனேன். காலை பத்தரைமணி இருக்கும். நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவர் மேஜைமீது தலை பதித்து உறங்கிக்கொண்டிருந்தார். குரல் கொடுத்ததும் அவர் தலை தூக்கி நோக்கினார் யார்? என்ன? என்றார். ரா. ஆறுமுகத்தைப் பார்க்க வேண்டும் என்றேன். ரா. ஆறுமுகம் சிறுகதைகள் எழுதி ஓரளவு கவனிப்புப் பெற்றிருந்த எழுத்தாளர். ஆசிரியர் ஊரில் இல்லை, சென்னை போயிருக்கிறார் என்று தெரிவித்தார் அங்கிருந்தவர். பத்திரிகை பற்றிக் கேட்கவும், ஓர் இதழ்தான் வந்திருக்கிறது. அடுத்து எப்போது வருமோ தெரியாது ஆசிரியர் வந்தால் தான் தெரியும் என்று அவர் கூறினார். தமிழன் ஆபீஸ் எங்கே இருக்கிறது? எப்படிப் போக வேண்டும்? என்று அவரிடம் கேட்டேன். இடமும் வழியும் சொன்னார் அவர். அவர் சொன்ன வழியில் போய், தமிழன் அலுவலகம் சேர்ந்தேன். சாதாரண கட்டிடம் தான். அருகில், வசதிக்காக பிரப்பம்பாய்த் தட்டிகள் வைத்து அறைகள் அமைத்து, கூரை வேய்ந்த அமைப்பு காணப்பட்டது. அங்குதான் தமிழன் ஆசிரியப் பகுதி செயலாற்றியது. கோ.த.சண்முகசுந்தரம் இருந்தார். இன்முகத்தோடு வரவேற்றார்.