பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S3 வாழ்க்கைச் சுவடுகள் இருமுறை பத்திரிகையாக வளர்ந்து வந்தது கிராம ஊழியன். திருலோக சீதாராம் அதன் நிர்வாக ஆசிரியர் என்றும், கு.ப. ராஜகோபாலன் ஆசிரியர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் பதிப்பாளர். பத்திரிகை கிராமஊழியன் பிரஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் சார்பில் வெளிவந்தது. அதன் செயலாளர் செட்டியார் தான். கிராம ஊழியன் பொங்கல் மலர் வெளியிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மலருக்குச் சென்னை எழுத்தாளர்களிடம் கதைகள் கட்டுரைகள் கேட்டுப் பெறவும், விளம்பரங்கள் சேகரிப்பதற்காகவும் கு.ப.ராவும், திருலோக சீதாராமும் வந்து, நவசக்தி அலுவலகத்தில் தங்கியிருந்ததாகவும், சில தினங்களுக்குப் பிறகு கு.ப.ரா. கும்பகோணம் போய்விட்டார் என்றும், தாம் மட்டும் இருப்பதாகவும் திருலோகம் தெரிவித்தார். எனது எழுத்துக்கள் கிராம ஊழியனில் வந்திருந்தன. திருலோகத்தை இதுவரை நான் சந்தித்ததில்லை. இப்போதுதான் நாங்கள் அறிமுகமானோம். அவர் கவிஞரும் கூட மந்தஹாசன்' என்ற பெயரில் கவிதை எழுதி வந்தார். திருலோக சீதாராம் பல வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உடனத்தியாயர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே இராம. சடகோபன் என்பவர் தியாகி என்ற இதழை நடத்தி வந்தார். எளியமுறையில் நடந்த சிற்றிதழ் அது திருலோகம் அவருக்கு உதவிபுரிந்தார். நாமே ஏன் ஒரு பத்திரிகை நடத்தலாகாது என்ற நினைப்பு அவருக்குத் தோன்றியது. ஆற்காடு தூதன்' (ARCOTHERALD) என்ற பெயரில் அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியார், வள்ளலார் இராமலிங்கம் ஆகியோர் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவர். ஒரு தனிரகமான குரலில் அவற்றை அவர் பாடுவது வழக்கம் சொற்பொழிவும் ஆற்றுவார். அதனால் அந்த வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர் கிட்டியிருந்தது. அவர் மனைவி ஊர் துறையூர். திருலோகம் அடிக்கடி அந்த ஊருக்குப் போவார். அங்கும் சுற்றுவட்டாரங்களிலும் பாரதியார் பாடல்களைப் பாடியும். இராமலிங்கர் பற்றிச் சொற்பொழிவாற்றியும் செல்வாக்கு பெற்றிருந்தார். அச்சமயத்தில் துறையூரில் கிராம ஊழியன் என்ற காங்கிரஸ் பத்திரிகை வார இதழாக வெளிவந்துகொண்டிருந்தது. பூரணம்பிள்ளை என்பவர் அதன் ஆசிரியர். அந்தப் பத்திரிகை பிறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அந்தக் காலத்தில் திருச்சியிருந்து நகரதூதன்' பத்திரிகை வாரம்தோறும் வந்து கொண்டிருந்தது. ரெ. திருமலைசாமி அதன் ஆசிரியர். அது காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆதரித்துவந்தது. திருமலைசாமி எழுத்தாற்றல் மிக்கவர். விறுவிறுப்பான நடையில், காரசாரமாக அவர் கட்டுரைகள் எழுதுவார். காங்கிரஸ் கட்சியையும், அந்த வட்டாரத்துக்