பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், எறி பந்தாட்டம், போன்ற ஆட்டங்கள் சிறுபரப்பு விளை யாட்டுக்கள். கால்பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள் பெரும் பரப்பு விளையாட்டுகளுக்கு உதாரணங்களாகும். எத்தகைய விளையாட்டுக்களாயினும், எல்லாம் வெளிப் புறபகுதியிலே, விரிந்து பரந்த திடல்களில் அமைந்த ஆடுகளங்களிலே தான் ஆடப்பட்டு வந்தன. வெயில் மிகுந்த பொழுதும் மழை பொழிந்த பொழுதும், பனி மற்றும் இயற்கையின் இடையூறுகளினூடே விளையாட்டுக்கள் ஆடப்படாமல் நின்று போன காலத்து, ஆர்வமுள்ள மக்கள் அவற்றினின்றும் விடுதலை பெற விரும்பினர். அதன் விளைவாக புகுந்தது தான் உள்ளே விளையாட இடந்தரும் விளையாட்டரங்கம் (Gymnasium) ஆகும். இயற்கையின் எழுச்சியை மட்டும் தடுத்து நிறுத்தாது, எல்லா வசதிகளும் நிறைந்து நிலவும் வண்ணம் அமையப் பெற்று விளையாட்டரங்கம் தோன்றியதால், விளையாட்டுக் களும் தடையில்லாமல் வளரத் தொடங் .ை இருந்தாலும் அதை உருவாக்குகின்ற அளவுக்கு நம் நாட்டில் வசதியேது ? தமிழகத்தில் விரல் விட்டு எண்னக் கூடிய அளவில் தான் விளையாட்டரங்கங்கள் இருக்கின்றன. அரசின் உதவியும் ஆர்வமும் இருந்தாலன்றி இது போன்ற அரங்கங்கள் நாட்டில் அமைவது இயலாத ஒன்று தான். விளையாட்டரங்கம் இல்லையே என்பதற்காக, விளே யாடாமல் சிறுவர்களும் பெரியவர்களும் இல்லைதான். இருக்கின்ற இடத்தையும், கிடைக்கின்ற பொருட்களையும் வைத்துக்கொண்டு, வல்லுநர்களாக வந்திருக்கின்றவர்