பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


களும் நம்மவர்களிலே இருக்கத்தான் இருக்கின்றனர். =2, Gagan G) 1135th (Play Ground Movement) stgör ni Guodij நாடுகளில் கிளம்பி வெற்றி பெற்றதுபோல், நம் நாட்டிலும் தோன்றினுல் தான், ஆடுகளங்கள் மிகுதியாகக் கிடைக்கும். அத்தகைய ஒர் நிலைமை ஒருநாள் தோன்ரு மலா போகும்! நகரம் எனும் உடலுக்கு ஆடுகளங்கள் நுரையீரலாக இருக்கின்றன என்கிருர் டாக்டர் ராப்சன். திறந்த வெளியில் உலாவும் தூயகாற்றைத் திரட்டித் தரும் ஆடுகளங்கள் நுரையீரல் போன்று உதவுவதால், நிறைய ஆடுகளங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகின்றன. அத்தகைய அருமையும் பெருமையும் நிறைந்த ஆடுகளங்கள் எப்படியெல்லாம் மனித இனத்திற்கு உதவு கின்றன, வாழ்க்கையை வளப்படுத்துகின்றன. வழிகாட்டு கின்றன என்பனவற்றை யெல்லாம் அறியும்போது, இத்தகைய இனிய வழியை நாம் ஏன் இத்தனை காலம் விட்டு வைத்திருந்தோம், விலகிச் சென்று கொண்டிருந் தோம் என்று வருந்தி ஏக்கப் பெருமூச்சை இறைக்காமல் நம்மால் இருக்க முடியவில்லை. என்ரு லும், காலம் வரும் வரை காத் திருக்கவேண்டாமா! காலம் அரசின் ஆர்வத்தில் வந்திருக்கிறது. காதிலே தேன் வந்து பாய்வது போன்ற விளையாட்டுத்துறை முன்னேற்ற செய்திகளும் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. ஆகவே தான், ஆடுகளங்கள் படைக்கும் அற்புதங்கள் நம்மவர் களிடையே நிறைய போகின்றன என்கிற நிம்மதிப் பெரு மூச்சும் விடுகிருேம்.