பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆடுகளத்தில் அற்புதங்கள்!

  • மனிதனை கூடி வாழும் மிருகம்’ என்று வர்ணிக்கிறது, சமூக இயலை விளக்கும் நூல் ஒன்று. குடும்பத்துடன் சேர்ந்து இருந்து, சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதைத் தான் இப்படிக் குறிப்பிடுகின்றது. -

கூட்டமாக இருக்கும்பொமுது மிருகங்கள் கேடு வினைப் பதில்லை. தனியாக இருக்கும்பொழுது தான் தாக்குதலைச் செய்யும் கொடுமையான குணம் கொண்டு விளங்குகிறது என்பார்கள். ஆனால், மனிதனது நிலை இதற்கு மாறு பட்டக் குணம்கொண்டு விளங்குகிறது என்பார்கள். ஆளுல், மனிதனது நிலை ஏன் மாறுபட்டு விளங்குகின்றது? தன்னந்தனியனுக மனிதன் இருக்கும்பொழுது அவன் மிகவும் இயல்பான குணம் உள்ளவனுகவே இயங்குகிருன். ஆனல், கூட்டமாக இருக்கும்பொழுதுதான் தன் குணத்தை இழக்கிருன், சிந்தனையை இழக்கிருன். மிருகங்களிலும் இழிந்தவகை மாறுகிருன். கூட்டமாக இருக்கும் மனிதர்களே சந்திக்கும் சந்தர்ப் பத்தைத் தான் ஆடுகளம் பெற்றிருக்கிறது. எந்தக் கூட்டத் தில் சேர்ந்து கொண்டு தன்னை மறக்கிருனே, தன் குணத்தை