பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


மாற்றுகிரு ணு, தீச்செயல்களைப் போற்றிப் புரிகிருளுே. அந்தக் கூட்டத்தைக் கொண்டுதான். ஆடுகளங்கள் அற்புதங்களை விளைவிக்கின்றன. அப்படி என்ன செய்கிறது ஆடுகளம்? 1. விதியும் மதியும் ஆடுகளத்தில் எந்த விளையாட்டை விளையாட வேண்டு மென்ரு லும் தனக்கென விதிகளையும் வழிமுறைகளையும் வகுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் கட்டுக் கோப்பு போலவே ஆடு களம் இயங்குகிறது. வலிமையும் அறிவும் உள்ள மக்கள் வாழ்வது தானே நாடு தனி மனிதன் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தானே நாடு இருக்கிறது. நாட்டுக்குக் கட்டுப் கோப்பும் மக்களுக்கு பாதுகாப்பும கட்டாயம் இருக்க வேண்டியது அவசிய மல்லவா பாதுகாப்பு இல்லையேல், அது நாடல்ல. புவி வாழும் காடன்ருே’ என்று கருதும் அளவுக்குத் தரம் தாழ்ந் தல்லவோ போய் விடும்! சமுதாய வளர்ச்சியே நாட்டின் தலையாய நோக்கம். ஆகவே, தனி மனிதன் வாழ்க்கையின் சிறப்பை ஒட்டியே சமுதாயத்தின் சிறப்பும், நாட்டின் பெருமையும் இலங்கிக் கிடக்கிறது. இந்த அடிப்படையில்தான். ஆடுகளமும் தனி மனிதனின் சிறப்பான தரமான முன்னேற்றத்தில் அக்கரை காட்டுகிறது . - தனி மனிதன் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளும் அளவுக்கு அவனைத் திறப்படுத்த, பல்வேறு விதிகளே அமைத்துக் கொண்டு பணியாற்றுகிறது.