பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


உண்டாகி வழிவழியாகப் பெருகி வளர்ந்தன. முன்னேர்கள் செய்ததைப் போலவே, பிற்கால சந்ததியினரும் அவர்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றியே ஏற்றுக் கொண்டனர். அத்தகைய குல வழிப்பண்பே, மனிதர்களை விளையாடத் துரண்டி, முன்னேரின் பாதையினின்றும் வழுவாமல் வழி நடத்திக் கொண்டிருக்கின்றன என்றும் கூறுகின்ருர்கள். 5. கலைகள் வளர்த்துக் கவின் புகழ் கொண்ட மனித இன வரலாற்றின் வழிமுறைகளினுாடே விளையாட்டானது தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உலா வருவது எல்லோரும் அறிந்த ஒன்று தான். அந்த சூழ்நிலையில், முற்கால மக்கள் பெற்றிருந்த பண்பாட்டின் முதிர்ச்சியையும், விரிவான எண்ணக் கிளர்ச்சியையும், ஆன்ற புகழ் வாய்ந்த முன்னேர்களின் பெருமையையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு விளையாட்டின் மூலம் பெறுவதால் தான் விளையாடுகிருேம்; விளையாட்டில் நம்மையறியாமலேயே ஒரு ஈடுபாடு உண்டாகிறது என்றும், பழைமையை நினைத்து, புதுமையான முறையில் முழுப் பண்பாட்டினையும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக விளையாட்டு விளங்குகிறது என்றும் கூறுகின்ருர்கள். மனிதனுக்கு அபிலாஷைகள் உண்டு. விருப்பங்கள் உண்டு. ஆசைக் கனவுகள் உண்டு. அவையெல்லாம் வாழ்க் கையில் நிறைவேறுவதில்லை. சிறிது வந்தாலும் பூரணத் துவம் அடைவதில்லை. அத்தகைய கனவுகளும், ஆசைகளும் விளையாட்டில் ஈடுபடுவதின் மூலம் திருப்திதருகின்றன, மன மகிழ்ச்சியை உண்டுபண்ணுகின்றன என்பதால்தான் விளையாடுகிருேம் என்கிரு.ர்கள், 6. மனிதனுக்குத் தாக்கும் சக்தி உணர்வு மிகுதி யாகவே உண்டு. மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை